ENG vs BAN: படுதோல்விக்கு பிறகு மீண்டு எழுந்த இங்கிலாந்து! 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

World Cup 2023, England vs Bangladesh:  உலகக் கோப்பை 2023 தொடரில் இன்றைய 7வது போட்டியில் பங்களாதேஷ் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 10, 2023, 07:37 PM IST
  • பங்களாதேஷ் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
  • வங்கதேச அணி 48.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 107 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார்.
ENG vs BAN: படுதோல்விக்கு பிறகு மீண்டு எழுந்த இங்கிலாந்து! 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி title=

ENG vs BAN Match Update: ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உலக கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி  48.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதற்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

வங்கதேச பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அடுத்தடுத்து அவுட்

உலகக் கோப்பை 2023 தொடரில் இன்றைய 7வது போட்டியில் பங்களாதேஷ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அதிக ரன்களை குவித்தார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இவர், 66 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். இருப்பினும், இதன் பிறகு வங்கதேச பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதற்கிடையில் முஷ்கிபுகர் ரஹீம் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். தௌஹீத் ஹ்ரிடே 61 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன், மெஹந்தி ஹசன், நஸ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் தஞ்சீத் ஹசன் போன்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர்.

மேலும் படிக்க - உலகக் கோப்பையில் விளையாடிய தந்தை - மகன்... தொட்டுத் தொடரும் பாரம்பரியம் - பட்டியல் இதோ

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்த விக்கெட்டுகள்

இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரீஸ் டாப்லி 10 ஓவர்களில் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைபற்றினார். இது தவிர மார்க் வுட், அடில் ரஷித், சாம் குர்ரான், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவித்தது

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் 107 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் 68 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். அதே சமயம் ஜானி பேர்ஸ்டோவ் 59 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி  50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்தது.

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் எடுத்த விக்கெட்டுகள்

பங்களாதேஷ் தரப்பில் அதிகபட்சமாக மெஹந்தி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷோரிபுல் இஸ்லாம் 3 வீரர்களை அவுட் செய்தார். இதுதவிர தஸ்கின் அகமது, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேலும் படிக்க - இந்து விரோத பதிவு... உலகக் கோப்பைக்கு இந்தியா வந்த தொகுப்பாளர் பாகிஸ்தான் திரும்பினார்!

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐந்து போட்டிகள்

-- 1975 உலகக் கோப்பை தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 202 வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு வெற்றி பெற்றது. 

-- 1975 உலகக் கோப்பை தொடரில் பர்மிங்காம் மைதானத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் 196 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு வெற்றி பெற்றது. 

-- 2019 உலகக் கோப்பை தொடரில் மான்செஸ்டர் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு வெற்றி பெற்றது. 

-- 2023 உலகக் கோப்பை தொடரில் தர்மசாலா மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு வெற்றி பெற்றது. 

-- 1999 உலகக் கோப்பை தொடரில் தி ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு வெற்றி பெற்றது. 

மேலும் படிக்க - கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல... உலகக் கோப்பையில் சுப்மன் கில் போல் அவதிப்படும் 6 வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News