ICC World Cup 2019: நியூலாந்து 10 விக்கெட் வித்தயாசத்தில் வெற்றி....

உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தயாசத்தில் அபார வெற்றி!!

Last Updated : Jun 1, 2019, 07:44 PM IST
ICC World Cup 2019: நியூலாந்து 10 விக்கெட் வித்தயாசத்தில் வெற்றி.... title=

கார்டிபில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அது அவருக்கு நன்றாகவே கை கொடுத்தது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திருமன்னே, கேப்டன் கருணாரத்னே களமிறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 2-வது பந்திலே ஹென்றி, திருமன்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய குஷால் பெரேரா, கருணாரத்னேவுடன் கூட்டு சேர்ந்து, இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். 9 ஓவரில் குஷால் பெரேராவின் விக்கெட்டை மறுபடியும் ஹென்றி சாய்த்தார். 

இதன்பிறகு களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள், நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னுடன் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒருபக்கம் கேப்டன் கருணாரத்னே தனது விக்கெட்டை இழக்காமல் அணி, டீசண்ட்டான ஸ்கோரை எட்ட வேண்டும் என்ற முனைப்புடன் ஆடியதோடு, அரைசதமும் அடித்தார். 

முடிவில், இலங்கை அணி 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 137 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. குப்தில் 73 ரன்களும் முன்ரோ 58 ரன்களும் எடுத்தனர்.

 

Trending News