ICC T20 World Cup: IND vs NED - இவருக்கு பதில் இவரா...? இங்கிலாந்து நிலைமையை தவிர்க்க இந்தியா இதை செய்யுமா!

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, நெதர்லாந்து அணியுடன் நாளை மோதுகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 26, 2022, 09:35 PM IST
  • இந்தியா - நெதர்லாந்து நாளை மதியம் 12.30 மணிக்கு (IST) நடைபெறுகிறது.
  • இரு அணிகளும் டி20யில் இதுவரை மோதியதே இல்லை.
  • போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.
ICC T20 World Cup: IND vs NED - இவருக்கு பதில் இவரா...? இங்கிலாந்து நிலைமையை தவிர்க்க இந்தியா இதை செய்யுமா! title=

ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவில் உள்ள அனைத்து அணிகள் தலா 1 போட்டியை விளையாடியுள்ளன. 

இந்நிலையில், நாளை (அக். 27) 2 போட்டிகள் நடைபெற உள்ளன. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி, நாளை காலை 8.30 மணிக்கு தென்னாப்பிரிக்கா - வங்கேதேசம் அணிகள் மோத உள்ளன. அதைத் தொடர்ந்து, சிட்னி மைதானத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி, இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. 

இதில், இந்திய - நெதர்லாந்து போட்டி மிகுந்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் டி20 அரங்கில் நேருக்கு நேர் மோதியது கிடையாது, இதுவே முதல் டி20 போட்டி. 2003, 2011ஆம் ஆண்டுகளில் 50 ஓவர் உலகக்கோப்பையில் மட்டும் இரண்டு போட்டிகளில் இவ்விரு அணிகள் மோதியுள்ளன. 

மேலும் படிக்க | ICC T20 World Cup: இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்த அயர்லாந்து.. மழையால் கவிழ்ந்தது கப்பல்!

குரூப் சுற்றுப்போட்டியில், நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தையும், நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது. ஆனால், கடைசி போட்டியில் அந்த அணி இலங்கையிடம் தோல்வியிட்டது. இருப்பினும், குரூப்-ஏ பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து, சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது. 

சூப்பர்-12 சுற்றில், நேற்று முன்தினம் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், நெதர்லாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த அணியில் பாஸ் டி லீடே, கோலின் ஆக்கர்மேன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த தொடர் முழுவதும், 150 ரன்களுக்கும் குறைவான ஸ்கோரை மட்டுமே எடுத்துள்ள அந்த அணியால் இந்தியா போன்ற அணியை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. இருப்பினும், டி20 போன்ற குறைந்த ஓவர்கள் கொண்ட ஃபார்மட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு, இன்றைய அயர்லாந்து - இங்கிலாந்து போட்டியே பெரும் உதாரணம். 

இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி சிறப்பான நிலையில் இருந்தாலும் பல்வேறு அனைத்து போட்டிகளையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இருப்பினும், நாளைய பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா என்றும் கேள்வியும் உள்ளது. 

கடந்த போட்டியில், அக்சர் படேலின் இடம் இந்த கேள்வியை எழுப்பியிருந்தாலும், சிட்னி போன்ற ஆடுகளங்கள் பேட்டிங்கிற்குதான் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கும். இதனால், அணியில் ஒரு சுழற்பந்துவீச்சு போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அக்சர் படேலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | IND vs PAK : அவரு எங்கையோ போய்ட்டாருங்க... அஸ்வினை கொண்டாடி தீர்த்த கோலி

ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டால், வெறும் 5 பந்துவீச்சாளர்கள் உடன் இந்தியா களமிறங்கும் நிலை ஏற்படும். தொடர்ந்து, நெதர்லாந்து அணியில் இடதுகை பேட்டர்கள் குறைவு என்பதால், அஸ்வினுக்கு பதில் சஹாலையும் ரோஹித் - டிராவிட் ஜோடி முயற்சித்து பார்க்க வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த போட்டியை போன்று அஸ்வினின் பேட்டிங் நுண்ணறிவும் இந்திய அணிக்கு உதவும் என்பதால், சஹாலை எடுக்க வாய்ப்பு குறைவுதான். ஆடுகளம் மெதுவாக காணப்படும் என்பதால் கூடுதல் பந்துவீச்சாளராக ஹர்சல் படேலுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. 

எனவே, நாளை ஒரிரண்டு மாற்றங்கள் அணியில் இருக்கலாம் இல்லையெனில், பாகிஸ்தானை எதிர்கொண்ட ரோஹித் & கோ காம்பினேஷவும் களமிறங்கலாம். இந்த தொடரில், சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை குவித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து, 111 ரன்களில் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ICC T20I Ranking: கபாலி ஸ்டைலில் கம்பேக்... டாப் 10-க்கு திரும்பி வந்த விராட் கோலி

உத்தேச பிளேயிங் XI

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் (அ) ரிஷப் பண்ட் (அ) ஹர்சல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின் (அ) சஹால், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது (அ) ரோலோஃப் வான் டெர் மெர்வ், ஃபிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News