ஹோல்டரின் சிக்ஸ்சர்கள் வீண்! பஞ்சாப்பிடம் தோற்றது ஹைதராபாத்!

ஹைதராபாத் அணியுடனான பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.

Written by - RK Spark | Last Updated : Sep 25, 2021, 11:32 PM IST
ஹோல்டரின் சிக்ஸ்சர்கள் வீண்! பஞ்சாப்பிடம் தோற்றது ஹைதராபாத்!  title=

ஐபிஎல் 2021 போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  இன்று மற்றும் நாளை வார இறுதி நாட்கள் என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றது.  37வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதியது.  இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் உள்ளதால் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப்பிற்க்கு தகுதி பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இன்றைய போட்டியில் விளையாடியது.  இதனால் இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

srh

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.  ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய ஹைதராபாத் அணியின் பவுலர்கள் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர்.  ராகுல் 21  ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 5 ரன்களுக்கு வெளியேறினர்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் 17 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆனார்.  அடுத்தடுத்து வந்த பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேர பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.  சன் ரைசர்ஸ் அணியின் ஹோல்டர் நான்கு ஓவர்களுக்கு 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

holder

மிகவும் எளிய இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.  டேவிட் வார்னர் 2 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 1 ரன்களுக்கும்  வெளியேறினர்.  அடுத்து இறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் கேதர் ஜாதவ் இருவரும் டெஸ்ட் போட்டி போல விளையாடி பந்துகளை வீண் அடித்தனர்.  கிட்டத்தட்ட போட்டி கிங்ஸ் லெவன் பக்கம் சாய்ந்தது.  அதன்பின் இறங்கிய ஜேசன் ஹோல்டர் தனது அதிரடியான ஆட்டத்தால் போட்டியை சிறிது நேரம் தன் பக்கம் திருப்பினார்.  மறுபுறம் விருத்திமான் சகா 31 ரன்கள் எடுத்திருந்தபோது பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.  கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நின்றது. 

கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஹோல்டர் சிக்ஸ் அடிக்க இந்த போட்டியில் வென்று விடலாம் என்று ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.  கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது.  சிக்சர் அடித்தால் சூப்பர் ஓவர் சென்று விடலாம் என்று எதிர்பார்த்த நிலையில், நாதன் எலிசின் சிறப்பான பந்துவீச்சால் ஒரு ரன்கள் மட்டுமே கிடைக்க பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

pb

ALSO READ மீண்டும் முதல் இடம் பிடித்த டெல்லி! ராஜஸ்தானிடம் எளிதான வெற்றி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News