NZ vs SL Match Highlights: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெற ஒரு முக்கியமான போட்டியாக நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் போட்டி அமைந்தது. இரு அணிகளுக்கும் இது கடைசி போட்டி என்பதாலும், இரு அணிகளும் வெவ்வேறு அழுத்தத்தின் கீழ் விளையாடியது. முன்பு கூறியது போல் நியூசிலாந்து அரையிறுதி சுற்றை குறிவைத்தும், இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபியை குறிவைத்தும் இந்த போட்டியை எதிர்கொண்டன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் டாஸை வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் பெரேரா மட்டுமே அதிரடியாக விளையாடினார். மற்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் கிளம்ப கடைசி நேரத்தில் தீக்ஷனா மட்டுமே போராடினார். இலங்கை 46.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. குசால் பெரேரா 51 ரன்களையும், தீஷனா 38 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் போல்ட் மட்டும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதிரடி காட்டிய நியூசிலாந்து
தொடர்ந்து, நியூசிலாந்து அணி எளிய இலக்கு என்றாலும் நெட் ரன்ரேட்டை அதிகப்படுத்த விரைவாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியது. கான்வே - ரவீந்திரா ஜோடி ஓப்பனிங்கில் 86 ரன்களை குவித்து அசத்தியது. அதில் கான்வே 45 ரன்களுக்கும், ரவீந்திரா 42 ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டானார்கள். இருப்பினும், அவர்களின் அதிரடியை மிட்செல் கையில் எடுத்தார்.
இருந்தாலும் மறுமுனையில் வில்லியம்சன் 14, சாப்மேன் 7 ரன்களில் அவுட்டாக இலக்கை நெருங்கிய வேளையில் மிட்செல் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டியை பிளிப்ஸ் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளுடன் நிறைவுசெய்ய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போல்ட் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இதன்மூலம், நியூசிலாந்து அணி 10 புள்ளிகளை பெற்ற நிலையில் தனது நெட் ரன்ரேட்டையும் அதிகபடுத்தியுள்ளது. 4ஆவது இடத்திலேயே நியூசிலாந்து நீடிக்கிறது. அடுத்தடுத்த இடத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளது. அந்த அணிகள் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும், நியூசிலாந்தை விட அதிக நெட் ரன்ரேட்டை பெற வேண்டும்.
நெட் ரன்ரேட் எப்படி இருக்கு?
நியூசிலாந்து +0.743, பாகிஸ்தான் +0.036, ஆப்கானிஸ்தான் -0.338 என நெட் ரன்ரேட் உள்ள நிலையில் அரையிறுதிக்கு நியூசிலாந்திற்கே அதிக வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக 300+ ரன்களில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கு வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை என்றுதான் கூற வேண்டும். எனவே, நவ. 15ஆம் தேதி வான்கடேவில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து அணி சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ