ஐபிஎல் 2022 தொடரில் 27வது லீக் போட்டியில் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. இப்போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி, டெல்லி அணிக்கு 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 173 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
வார்னர் அதிரடி
இந்த போட்டியில் டெல்லி அணி வீரர் வார்னர் சிறப்பாக விளையாடினார். 38 பந்துகளை எதிர்கொண்ட அவர், 66 ரன்கள் குவித்தார். 4 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் பறக்கவிட்டு டெல்லி அணிக்கு நம்பிக்கையளித்தார். இவர் களத்தில் இருக்கும் வரை டெல்லி அணியின் வெற்றி பிரகாசமாக தெரிந்தது. ஆனால், இவர் வெளியேறியதும் ஆட்டம் தலைகீழாக மாறி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியிலும் என்டு கார்டுக்கு ரெடியாகும் இந்திய வீரர்
வார்னர் மகள் கண்ணீர்
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வார்னர், வனிந்து ஹசரங்காவின் பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடிக்க முயற்சி செய்தார். அப்போது, எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். இதனை கேலரியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த வர்னரின் மகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வார்னருக்கு அவுட் கொடுத்ததும், மகள் ஈவி கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
— Addicric (@addicric) April 16, 2022
பெங்களூர் சிறப்பான வெற்றி
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4வது வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் டாப் 5-ல் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது. பின்வரிசையில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி பெங்களூரு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 66 ரன்களை விளாசிய அவர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
மேலும் படிக்க | IPL:ஹர்திக் பாண்டியா உடைத்த ஸ்டம்பின் விலை இத்தனை லட்சமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR