நான் பாதியில போக வேண்டிய நேரம் வந்துருச்சு டீம் - ஹர்திக் பாண்டியா சோகம்..!

உலக கோப்பை பாதியிலேயே இந்திய அணியை விட்டு போக வேண்டிய நேரம் வந்துருச்சு, துருதிஷ்டவசமானது என்றாலும், என்னுடைய ஆன்மா எப்போதும் இந்திய அணியுடன் இருக்கும் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 4, 2023, 12:53 PM IST
  • ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்
  • உலக கோப்பையில் இருந்து நீக்கம்
  • மாற்று வீரராக பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு
நான் பாதியில போக வேண்டிய நேரம் வந்துருச்சு டீம் - ஹர்திக் பாண்டியா சோகம்..! title=

இந்திய அணியின் துணை கேப்டனாக 2023 உலக கோப்பை தொடரில் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இப்போது உலக கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளார். அவரின் நீக்கம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவும், பேட்டிங்கில் இந்திய அணிக்கு தூணாகவும் இருந்த நிலையில் காயம் காரணமாக இனி உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. 

உலக கோப்பைக்கு முன்பாக காயம் காரணமாக முக்கிய போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, 50 ஓவர் உலக கோப்பைக்காக தீவிரமாக பயிற்சி எடுத்து அணிக்கு திரும்பினார். தொடக்க போட்டிகளில் இந்திய அணிக்காக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பந்துவீச்சில் பங்களிப்பு செய்தார். அவரின் இருப்பு பிளேயிங் லெவனில் இந்திய அணிக்கு சரிவிகித அமைப்பை கொடுத்தது. ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக வலியால் துடித்த பாண்டியா மைதானத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனைக்கு ஸ்கேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

மேலும் படிக்க | இந்த வீக்னஸூ இருந்தும் இந்தியா இலங்கையை ஜெயித்தது எப்படி?

ஆரம்பத்தில் காயம் பெரியளவில் இல்லை என்றும், ஒரு சில போட்டிகளுக்குள் திரும்பி விடுவார் என்றும் கூறப்பட்டது. இரண்டு போட்டிகள் ஓய்வெடுக்க வேண்டும் அதன்பிறகு உலக கோப்பைக்கான இந்திய அணியில் இணைவார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. பெங்களுருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் அவருக்கு இருக்கும் காயம் ஆபத்தானது என்பதால் உடனடியாக இந்திய அணியுடன் இணைய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.  வாசிம் அக்ரம் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கூட கணுக்கால் காயம் என்பது சீரியஸான ஒன்று, அதனால் ஹர்திக் பாண்டியா உடனடியாக இந்திய அணியுடன் இணைய வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தனர். அவர் கூறியதுபோலவே இப்போது உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.

இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான செய்தி ஒன்றையும் பாண்டியா பகிர்ந்துள்ளார். அதில் உலக கோப்பை தொடரில் இனி நான் பங்கேற்க முடியாது. துருதிஷ்டவசமானது. இருப்பினும் என்னுடைய ஆன்மா எப்போதும் இந்திய அணியுடனேயே இருக்கும். ஒவ்வொரு பந்துக்கும் அணியை நான் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பேன். இந்த அணி மிகவும் சிறப்பானது. அவர்களுடனான பயணத்தை பாதியில் செல்வது வருத்தம் என்றாலும், நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | உலக்கோப்பை: இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News