தோனி சிறந்த கேப்டன் என சொல்லி வாங்கி கட்டிக் கொண்ட ஹர்பஜன்..!

தோனி சிறந்த கேப்டன் எனக் கூறிய ஹர்பஜன் சிங்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கங்குலியை சிறந்த கேப்டன் அவர் கூறிய டிவிட்டர் பதிவையும் இப்போது மேற்கோள் காட்டியுள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 05:46 PM IST
தோனி சிறந்த கேப்டன் என சொல்லி வாங்கி கட்டிக் கொண்ட ஹர்பஜன்..! title=

ஐபிஎல் 2023 தொடங்க இருக்கும் நிலையில், ஹர்பஜன் சிங் ரசிகர்களின் பதிலடிக்கு ஆளாகியிருக்கிறார். உங்களின் பார்வையில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு ஹர்பஜன் அளித்த பதில் தான் இப்போது அவருக்கு தலைவலியாக அமைந்துள்ளது. டிவிட்டர் ரசிகர் ஒருவர் ஹர்பஜனிடம் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சிறந்த கேப்டன் என யாரை நினைக்கிறீர்கள் என எழுப்பிய கேள்விக்கு அவர் தோனி என பதில் அளித்தார். ஆனால் ரசிகர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என இருவரின் பெயர்களை மட்டுமே ஆப்சனாக கொடுத்திருந்தார்.

மேலும் படிக்க | தோனியின் சாதனையை சமன் செய்த பந்துவீச்சாளர்... அடுத்தது ரிச்சர்ட்ஸின் சாதனை தான்!

ஆனால், ஹர்பஜன் அவர்கள் இருவரின் பெயரையும் தேர்ந்தெடுக்காமல் தோனியின் பெயரை குறிப்பிட்டு பதிலளித்தார். அவரின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் ஏன் நீங்கள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனென்றால், ஹர்பஜன் கங்குலியை ஒருமுறை சந்திக்கும்போது எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு எப்போதும் என்னுடைய சிறந்த கேப்டன் நீங்கள் தான் தாதா. உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார்.

அந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து எப்போதும் சிறந்த கேப்டன் என கங்குலியை கூறிவிட்டு, இப்போது தோனியை சிறந்த கேப்டன் எப்படி உங்களால் கூற முடிகிறது? என ஹர்பஜனை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், நேரத்துக்கு தகுந்தாற்போல் அவர் பேசுவதாகவும் சாடியுள்ளனர்.

ஹர்பஜன் கிரிக்கெட் போட்டிகளில் கங்குலி தலைமையில் இந்திய அணிக்கு அறிமுகமானார். அவரது தலைமையில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெற்ற ஹர்பஜன் சிங், தோனி தலைமையிலும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது ரோகித் சர்மா தான் கேப்டனாக இருந்தார். 

மேலும் படிக்க | IPL 2023: தோனி சேப்பாக்கத்தில் விளையாடப்போகும் கடைசி ஐபிஎல் போட்டி..! தேதி இங்கே

மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News