இன்று 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் சுனில் கவாஸ்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சுனில் கவாஸ்கர் என்ற அடையாளத்தில் இருந்து லிட்டில் மாஸ்டர் என்று பிரபலமாகும் வரையிலான பயணம் உலகம் அறிந்தது. இதில் நீங்கள் அறியாத சுவராசியமான சம்பவங்கள் சிலவற்றை பகிர்ந்துக் கொள்கிறோம்.
ஜூலை மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான மாதம் தான். இந்தியாவின் மிகச் சிறந்த மூன்று கிரிக்கெட் ஜாம்பவான்களின் பிறந்தநாள் ஜூலையில் தான் வருகிறது. ஜூலை 7 ஆம் தேதி எம்.எஸ்.தோனியின் பிறந்த நாள், அதற்கு அடுத்த நாள் ஜூலை 8 அன்று சவுரவ் கங்குலியின் பிறந்த நாள். பின்னர் ஒரு நாள் இடைவெளியில் இந்தியாவின் அசல் 'லிட்டில் மாஸ்டர்' - சுனில் கவாஸ்கரின் பிறந்த நாள் ஜூலை 10ஆம் தேதியன்று வருகிறது.
கவாஸ்கரின் 72 வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) புகழ்பெற்ற முன்னாள் இந்திய கேப்டனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்தது.
1983 World Cup-winner
233 international games
13,214 international runs
First batsman to register 10,000 runs in TestsHere's wishing Sunil Gavaskar - former #TeamIndia captain & one of the finest batsmen to have ever graced the game - a very happy birthday. pic.twitter.com/8tQeMlCbSn
— BCCI (@BCCI) July 10, 2021
1983 உலகக் கோப்பை வென்றவர். 233 சர்வதேச விளையாட்டுக்கள். 13,214 சர்வதேச ரன்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை பதிவு செய்த முதல் பேட்ஸ்மேன். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டை சிறப்பித்தவர். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.
சுனில் கவாஸ்கரின் காதில் அருகே இருந்த மச்சம் தான் அவர் இவ்வளவு பெரிய கிரிக்கெட்டர் ஆவதற்கு காரணம். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். சுனில் பிறந்தவுடன் அவரது மாமா பார்க்கா வந்திருந்தார். அப்போது குழந்தையின் காதின் அருகே மச்சம் இருப்பதைப் பார்த்தார். ஆனால் அடுத்த முறை வந்து பார்க்கும்போது, அந்த பிறப்பு அடையாளத்தைக் காணவில்லை, இதை கவாஸ்கரின் மாமா கவனிக்கவில்லை என்றால் இந்தியா நிச்சயமாக ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனைத் தவறவிட்டிருக்கும்.
Also Read | Criketers sex scandle: பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரபல கிரிக்கெட்டர்கள்
குழந்தை மாறிவிட்டது என்பதைத் தெரிந்துக் கொண்ட அவர் மிகத் தீவிரமாகத் தேடினார். அவரது தேடலின் விளைவாக சுனில் காவஸ்கர் ஒரு மீனவக் குடும்பத்தை சேர்ந்த தாயிடம் போய்விட்டதை அறிந்தார். அதன் பிறகு நிலைமையை அவர் சரி செய்தார்.
இந்த அதிர்ச்சியூட்டம் சம்பவத்தை கவாஸ்கர் தனது சுயசரிதையான "சன்னி டேஸ்" (Sunny Days) இல் எழுதியுள்ளார். "நான் ஒருபோதும் கிரிக்கெட் வீரராக மாறியிருக்க மாட்டேன், இந்த புத்தகம் நிச்சயமாக எழுதப்பட்டிருக்காது, கழுகுக் கண்கள் கொண்ட நாராயண் முசேகர் மாமா, நான் பிறந்த நாளன்று என்னை வந்து பார்க்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்த உலகில் எனது முதல் நாளில் மருத்துவமனையில் என்னைப் பார்க்க வந்த நானா-காக்கா (நான் அவரை அப்படித்தான் அழைப்பேன்), எனது இடது காதின் மேற்பகுதிக்கு அருகில் ஒரு சிறிய மச்சம் இருப்பதைக் கவனித்திருக்கிறார்" என்று சுயசரிதையில் கூறப்பட்டுள்ளது.
"அடுத்த நாள் என்னை பார்க்க அவர் மீண்டும் வந்தார். என் அம்மாவுக்கு அருகில் படுத்திருந்த குழந்தையை தூக்கியபோது, இடது காதில் அந்த பிறப்பு அடையாளக்ம் இல்லை என்பதைக் கண்டுபிடித்தார். உடனே அவர் வெறித்தனமான தேடலைத் தொடங்கினார். மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டார். தேடுதல் வேட்டையில் நான் கண்டுபிடிக்கப்பட்டேன். நான் ஒரு மீனவத் தாயின் அருகில் ஆனந்தமாக தூங்கிக்கொண்டிருந்தேன், நான் ஏற்படுத்திய குழப்பம் எனக்கே தெரியவில்லை. குளிக்க வைத்து தாயிடம் திருப்பிக் கொடுக்கும்போது, குழந்தைகள் இடம் மாறிவிட்டன" என்று லிட்டில் மாஸ்டர், தான் லிட்டிலாக இருந்தபோது ஏற்பட்ட மிகவும் சுவாரசியமான சம்பவத்தை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | Euro 2020: இங்கிலாந்துக்கு எதிராக UEFA ஒழுங்கு நடவடிக்கை! காரணம் தெரியுமா?
அதேபோல் ஒரு போட்டியின் போது சுனில் கவாஸ்கருக்கு, போட்டியின் அம்பையர் ஹேர்கட் செய்த சம்பவத்தையும் அவர் குறிப்பிடுகிறார். 1974 ஆம் ஆண்டில் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது, காற்று மிகவும் வேகமாக வீசியது. கவாஸ்கரின் நீளமான தலைமுடி பறந்துவந்து அவரது கண்ணை மறைத்தது.
உடனே கவாஸ்கர் நடுவர் டிக்கி பேர்ட் (Dickie Bird)ஐ தனது தலைமுடியை ஒழுங்கமைக்கச் சொன்னார், போட்டியின்போது கிரிக்கெட் பந்தின் மடிப்புகளில் இருந்து வெளிவரும் நூல்களை வெட்டுவதற்காக அவரிடம் ஒரு கத்தரிக்கோல் இருந்தது. அதை பயன்படுத்தி டிக்கி பேர்ட் கவாஸ்கரின் தலைமுடியை வெட்டினார்.
அந்தப் போட்டியில் இந்தியா தோற்றது. அந்த போட்டித் தொடரிலும் இந்தியா தோற்றாலும், கவாஸ்கரின் 101 ரன்களும், அம்பயர் அவருக்கு செய்த ஹேர்கட்டும் கிரிக்கெட் சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டன.
Also Read | ஜூன் மாத ஐ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலுக்கு 2 இந்திய வீராங்கனைகள் பரிந்துரை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR