முகமது ஷமி குறித்து அவதூறு - வெட்கக்கேடானது என கம்பீர் கண்டனம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்திய வீரர் முகமது ஷமி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 25, 2021, 08:00 PM IST
  • தனி நபரை குறிவைப்பது சரியல்ல, முட்டாள்களுக்கு நாடு, மதம் இல்லை.
  • எந்தவொரு சமூகத்துடனும் ஒப்பிட்டு பேசுவது வெட்கக்கேடானது.
  • ஒரு முறை தோற்றதுக்கு, இதுபோன்ற எதிர்வினை சரியானதல்ல.
முகமது ஷமி குறித்து அவதூறு - வெட்கக்கேடானது என கம்பீர் கண்டனம் title=

புது டெல்லி: டி 20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. பாகிஸ்தானின் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியாவில் சில இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மறுபுறம் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். 

இந்நிலையில், பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய சம்பவங்கள் மிகவும் வெட்கக்கேடானது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் முகமது ஷமி மற்றும் விராட் கோலி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தியவர்களுக்கு கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மிகவும் வெட்கக்கேடான விஷயம்:
பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய சம்பவம் குறித்து பேசிய கம்பீர், "நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள். பாகிஸ்தான் வெல்லும்போது, ​​நீங்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறீர்கள். இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். நாட்டில் எங்காவது இதுபோன்ற சில சம்பவம் நடந்திருக்கிறது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனென்றால் நீங்கள் உங்கள் அணியை ஆதரிக்கிறீர்கள் மற்றும் தோல்வி, வெற்றி என்பது தொடர்ந்து நடந்து வருபவை தான். . ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து,சிலர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ALSO READ |  ரோஹித்தை அணியில் இருந்து நீக்க வேண்டுமா? கோலியின் பதில்!

தனி நபரை குறிவைப்பது சரியல்ல:
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மேலும் பேசுகையில், நீங்கள் ஒரு போட்டியில் பங்கேற்று விளையாடச் செல்லும்போது, ​​நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செல்வீர்கள். எதிரணி வீரரிடம் கைகுலுக்குவதோ அல்லது ஒருவரை கட்டிப்பிடிப்பதோ தவறில்லை. ஆனால் நீங்கள் களத்தில் ஒரு போட்டியில் விளையாடும்போது நட்பு எல்லாம் பார்ப்பதில்லை. வெல்ல வேண்டும் என்று தான் விளையாடுகிறோம். நமது அணி வெற்றி பெற்றாலும் சரி, தோற்றால் சரி, அது நமது நாட்டுக்காக விளையாடும் அணி, அதில் தனி நபரை குறிவைப்பது சரியல்ல.

சமூகத்துடனும் ஒப்பிட்டு பேசுவது வெட்கக்கேடானது:
இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் நாட்டுக்காக இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியவர்கள். இந்தியாவிற்காக இவ்வளவு காலமாக விளையாடி, போட்டிகளில் வெற்றி பெற்றவரை, எந்தவொரு சமூகத்துடனும் ஒப்பிட்டு பேசுவது வெட்கக்கேடானது. நாம் அனைவரும் முகமது ஷமி மற்றும் இந்திய அணியுடன் இருக்க வேண்டும்.

ஒரு போட்டியில் அணி தோற்றால், ஒரு தனி நபரை குறிவைத்து தாக்குவது கொச்சைப் படுத்துவது மிக மோசமான விஷயம். இதற்கு முன் பாகிஸ்தான் நம்மிடம் 12 போட்டிகளில் தோற்றது. இந்தியா 12 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஒரு முறை தோற்றதுக்கு, இதுபோன்ற எதிர்வினை சரியானதல்ல. 

ALSO READ |  Over Confidence-ஆல் சொதப்பிய இந்தியா! பாகிஸ்தான் அபார வெற்றி!

தோல்வியிலும் அணியை ஆதரிக்க வேண்டும்:
முதலில் போட்டியில் தோல்வியடைந்து வருத்தத்தில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு, சமூக வலைதளங்களில் இதுபோன்ற முறையில் ரியாக்ஷன் தெரிவிப்பது சரியில்லை. வீரர்களை உங்கள் இடத்தில் வைத்து பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அணிக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும்போது, தோல்வியிலும் அவர்களை ஆதரிக்க வேண்டும்.

முட்டாள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்:
முட்டாள்கள் உலகம் முழுவதும் உள்ளனர். முட்டாள்களுக்கு நாடு இல்லை, மதம் இல்லை. நீங்கள் எந்த விளையாட்டையும் இஸ்லாம் மதத்துடன் அல்லது வேற எந்த மதத்துடன் தொடர்புபடுத்தினால், அது உங்கள் மனநிலையைக் காட்டுகிறது. அவர்களுக்கு எந்த முக்கியத்துவத்தையும் அளிப்பது பயனற்றது. 

முதல் போட்டியில் தான் நாம் தோற்றோம். இன்னும் சில போட்டிகள் உள்ளது. நம் நாடு மூன்று உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால், முழுப் போட்டியிலும் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை எனக் கூறினார்.  

ALSO READ |  பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News