இந்தியாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்தவர் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகிறார்!

பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா (Ramiz Raja) , வெளிநாட்டு வீரர் ஒருவரை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 28, 2021, 06:19 PM IST
இந்தியாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்தவர் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகிறார்! title=

துபாய்: 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவர் மிஸ்பா உல் ஹக்கிற்கு பதிலாக அணியில் இடம் பெறலாம். கேரி கிறிஸ்டனைத் தவிர, பாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன்களான சைமன் கட்டிச் (Simon Katich) மற்றும் இங்கிலாந்து முன்னால் கிரிக்கெட் வீரர் பூட்டர் மூர்ஸ் (Peter Moores) ஆகியோடின் பெயரும் உள்ளது.

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி இருந்தார். சைமன் கட்டிச் இரண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்தார். மூர்ஸ் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2021 தொடங்குவதற்கு சற்று முன்பு, மிஸ்பா-உல்-ஹக் (Misbah Ul Haq) பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். மிஸ்பா ராஜினாமா செய்ததை அடுத்து, பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸும் (Waqar Younis) பதவி விலகினார்.

தற்காலிக பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்:
இதனையடுத்து, டி20 உலகக் கோப்பைத் தொடரில் (T20 World Cup in the UAE) பங்கேற்று உள்ள பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்காலிகமாக பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வான்னோன் பிலாண்டர் ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆலோசகர்களாக அணியுடன் இணைந்துள்ளனர். 

ALSO READ  | தோனி.. நான் இதுவரை சந்தித்துள்ள மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் :கேரி கிரிஸ்டன் புகழாரம்

இந்நிலையில், புதிய பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா (Ramiz Raja) , வெளிநாட்டு வீரர் ஒருவரை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கேரியின் பெயர் முதலிடத்தில் உள்ளது:
பாகிஸ்தானின் புதிய தலைமை பயிற்சியாளர் ரேஸில் கேரி கிர்ஸ்டன் பெயர் முன்னிலையில் உள்ளது. கிறிஸ்டன் 2008 முதல் 2011 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவரது மேற்பார்வையின் கீழ், டீம் இந்தியா மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாம்பியனாக (World Cup 2011 winning Indian Team) ஆனது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் உலகின் நம்பர் ஒன் அணியாக மாறியது குறிப்பிடத்தக்கது.

கேரி கிர்ஸ்டன் கிரிக்கெட் வாழ்க்கை:
கிறிஸ்டனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் சிறப்பாக இருந்தது. அவர் சவுத் ஆப்பிரிக்க அணிக்காக 101 டெஸ்ட் மற்றும் 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த பயணத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7289 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6798 ரன்களும் எடுத்துள்ளார். இந்திய அணியை உலக சாம்பியனாக்கிய பிறகு, தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் சவுத் ஆப்பிரிக்க அணி எந்தவொரு பெரிய வெற்றியையும் பெறவில்லை. 

ALSO READ  | இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாமின் வெற்றி: பாகிஸ்தான் அமைச்சர்

டி20 உலகக் கோப்பை 2021 பாகிஸ்தான் பர்பாமன்ஸ்:
மிஸ்பா மற்றும் வக்கார் ஆகியோரின் ராஜினாமா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் (T20 World Cup 2021) பாகிஸ்தான் அணியின் செயல்திறனை பாதிக்கவில்லை. ஏனென்றால், முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரம எதிரியான இந்தியாவை தோற்கடித்தது மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று குரூப் 2 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாபர் அசாம் (Babar Azam) தலைமையிலான அணி அரையிறுதிக்கு முன்னேறும் பாதையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  | ஹர்பஜன் - முகமது அமீருக்கு இடையே கடுமையான கருத்து மோதல்; வைரலாகும் ட்வீட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News