இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான t20 போட்டி தொடர் முடிவடைந்துள்ளது. இப்போது இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்காக ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், சஞ்சீவ் சாம்சனை t20 போட்டிகளில் ஆடும் லெவனில் தேர்ந்தெடுக்காதது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டோட்டா கணேஷ் தனது ட்விட்டரில் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் படிக்க | உலகக்கோப்பை தோல்வி! ஆஸ்திரேலியா செய்த அதிரடி மாற்றம்!
அவர் தன்னுடைய பதிவில், " 20 ஓவர் இந்திய அணியில் இந்தப் போட்டியிலும் சஞ்சீவ் சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை என்பது ஆழமாக நம்ப முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயரும் திறமையான வீரர் தான். ஆனால் டி20 போட்டியில் சஞ்சீவ் சாம்சன் அணிக்கு பொருத்தமான வீரர். இந்திய அணியின் நிர்வாகம் ஸ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் போட்டிக்கு தரமான வீரர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்தக் கருத்தை பலரும் ஆமோதித்துள்ளனர். டோட்டா கணேஷ் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர். இவர் கர்நாடக அணிக்காக ரஞ்சிப் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்தியா அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் ஆடி உள்ளார் . சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களையும் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் . 1997 இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்தின் போது கேப் டவுனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக இந்திய அணிக்கு களமிறங்கினார்.
மேலும் படிக்க | இந்த சாதனைகள் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை: ஜெகதீசனை நீக்கிய சிஎஸ்கே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ