புஜாராவை எச்சரித்த இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர்!

இதே மோசமான பார்ம் தொடர்ந்தால் அணியில் இருந்து இடத்தை இழக்க நேரிடும் என்று முன்னாள் டீம் இந்தியா தேர்வாளர் சேதேஷ்வர் புஜாராவை எச்சரித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2022, 01:57 PM IST
  • இந்திய மிடில் ஆர்டர் அணி நிர்வாகத்திற்கு கவலையாக உள்ளது
  • விராட் கோலி தலைமையிலான அணி, செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்தது.
புஜாராவை எச்சரித்த இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர்! title=

செஞ்சூரியனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டன் விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா போன்ற மூத்த பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவதால், இந்திய மிடில் ஆர்டர் அணி நிர்வாகத்திற்கு கவலையாக உள்ளது.  மேலும் அவர்கள் தொடர்ந்து சரியாக விளையாடவில்லை என்றால் வேறு வீரரை அந்த இடத்தில் இறக்கவும் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

ALSO READ | INDvsSA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகிய விராட் கோலி!

இந்திய அணியின் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சரந்தீப் சிங் கூறுகையில், "செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் புஜாரா 0 மற்றும் 16 ரன்கள் எடுத்தார்.  பேட்டிங்கில் இந்திய அணி சரியாக செயல்படவில்லை.  கேஎல் ராகுல் மட்டுமே சிறப்பாக விளையாடினார்.  அணி நிர்வாகம் அவரையும் விராட் கோலியையும் முழுமையாக சார்ந்திருக்க முடியாது.  ஆனால் நான் புஜாராவைப் பற்றி பேச விரும்புகிறேன், ஏனெனில் அவர் ரன்களை அடிக்க வேண்டும்.  அவருடைய இடத்தில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே கலக்கிய ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட தயாராக இருக்கிறார்.   அனுபவம் வாய்ந்த வீரரான புஜாரா தொடர்ந்து ரன்கள் அடிக்க தவறினால் அணியில் இருந்து கழட்டிவிடபடுவார்.  

pujara

ஒட்டுமொத்தமாக இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது.  விராட் கோலி தலைமையிலான அணி, செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்தது.  இந்த தொடரை வெல்வோம் என்கிற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.  செஞ்சூரியனில் இரண்டு இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்காவை 200க்கும் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்துள்ளனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.   இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்,  குறிப்பாக சிராஜ் தனது வேகத்தால் மிரட்டி வருகிறார்.  இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெரும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணி என்ற வரலாற்றைப் படைப்பார்கள்" என்று சரந்தீப் கூறினார்.

ALSO READ | புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News