கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2022, 01:15 PM IST
  • இந்த கடினமாக நேரத்தில் தனிமையை நாங்கள் விரும்புகிறோம்
  • பெண் குழந்தை பிறந்து ஆரோக்கியமாக உள்ளது மட்டுமே ஆறுதலளிக்கிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு! title=

உலகப் புகழ் பெற்ற கால்பந்து ஆட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகுஸ்-க்கு 5வது பிரசவம் நடந்துள்ளது.

இந்த 5வது பிரசவத்தில் அவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.  அதில் ஆண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்துள்ளது.

இதனால் ரொனால்டோவின் குடும்பம் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. 

Ronaldo Georgina

இதையடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், " எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது, அதில் எதிர்பாராதவிதமாக ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது, பெண் குழந்தை நலமுடன் இருக்கிறாள். எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடாத வலியை நாங்கள் உணர்கிறோம். 

மேலும் படிக்க | Elon Musk - Twitter: டிவிட்டரை மொத்தமாக வாங்க தயாராகும் எலான் மஸ்க்

இந்த தருணத்தில் பெண் குழந்தை பிறந்து ஆரோக்கியமாக உள்ளது மட்டுமே ஆறுதலளிக்கிறது. என் மனைவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி. இந்த இழப்பினால் எங்கள் குடும்பம் பெரும் மன வலியில் இருக்கிறது. எனவே இந்த கடினமாக நேரத்தில் தனிமையை நாங்கள் விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Ronaldo Family

கிறிஸ்டியானா ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிகுஸ் தம்பதியினருக்கு ஏற்கெனவே கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். 

Ronaldo Family

இந்நிலையில் ஜார்ஜினா 5வது முறை கர்ப்பமானபோது இரட்டை குழந்தைகள் பிறக்கவுள்ளதாக ரொனால்டோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News