இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது!
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. துவக்கிற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் காரணமாக ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கிந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் இவின் லீவிஸ் 40 ரன்களுடனும், ஷாய் ஹோப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யர் 4-ஆம் நிலைக்காகச் சேர்க்கப்பட்டார். குல்தீப் யாதவ் இடம்பெற சாஹல் ஓய்வு பெற்றார். முன்னதாக டி20 தொடரினை 3-0 என முழுமையாக இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, ஒருநாள் தொடரை கைப்பற்ற முழு பலத்துடன் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.