அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக FIFA அறிவித்தது. FIFA கவுன்சிலின் பணியகத்தால் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது FIFA சட்டங்களை கடுமையாக மீறுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. "FIFA கவுன்சில் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கின் காரணமாக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக இடைநீக்கம் செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளது, இது FIFA சட்டங்களை கடுமையாக மீறுவதாகும்" என்று ஒரு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது FIFA.
உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு நீக்கப்படும் என்றும் FIFA தெரிவித்துள்ளது. மேலும் AIFF நிர்வாகக் குழுவின் அதிகாரங்கள் முழுமையாக ரத்துசெய்யப்படும். "இந்த இடைநீக்கத்தால் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 11 - 30 அன்று இந்தியாவில் நடைபெறவிருந்த FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை 2022 திட்டமிட்டபடி தற்போது இந்தியாவில் நடத்த முடியாது" என்று அந்த வெளியீடு மூலம் FIFA கூறியது.
மேலும் படிக்க | ’இதற்கு ஒரு முடிவில்லையா?’ ஊர்வசி ரவுடேலாவுக்கு ரிஷப் பன்டின் அடுத்த போஸ்ட்
போட்டிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை FIFA மதிப்பீடு செய்து வருகிறது, தேவைப்பட்டால், கவுன்சிலின் பணியகத்திற்கு இந்த விஷயத்தை அனுப்பும். FIFA இந்தியாவில் உள்ள இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமான தொடர்பில் உள்ளது, மேலும் இந்த வழக்கில் இன்னும் சாதகமான முடிவு எட்டப்படலாம் என்று நம்புகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஓய்வை அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு! தோனியின் எதிர்கால குறிக்கோள்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ