தோனி சொல்லும் இந்த வீரர் அடுத்த இந்திய கேப்டன்? டேனீஷ் கனேரியா

தோனி சொல்லும் இந்த வீரர் அடுத்த இந்திய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கணித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 27, 2022, 06:32 PM IST
  • ரோகித் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்
  • இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தானாம்
  • பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனீஷ் கனேரியா கணிப்பு
தோனி சொல்லும் இந்த வீரர் அடுத்த இந்திய கேப்டன்? டேனீஷ் கனேரியா title=

இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு கேப்டனாக ரோகித் எடுக்கும் முடிவுகள் இந்திய அணிக்கு சிறப்பான முடிவுகளை கொடுத்து வருகிறது. ஆனால், நீண்ட நாட்களுக்கு அவர் இந்திய அணியின் கேப்டனாக இருப்பாரா? என்றால் அதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அவருக்கு இப்போது 34 வயதாகிறது. அதனால், அடுத்த இந்திய கேப்டன் யாராக இருக்கும்? என யூகங்கள் இப்போது இருந்து கிளம்ப தொடங்கியுள்ளது. 

மேலும் படிக்க | இந்த தடவை ஆரஞ்ச் கேப் விராட் கோலிக்குதானாம்- எப்படி தெரியுமா?

தோனி சொல்லும் வீரர்

ரவீந்திர ஜடேஜாவிடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி ஒப்படைத்துள்ளார். இது தோனியின் சரியான முடிவு என பாராட்டியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, இந்திய அணியின் வருங்கால கேப்டனாக நியமிகப்படுவதற்காக சென்னை அணி ஒரு கேப்டனை தயார் செய்வதாகவும் கூறியுள்ளார்.

தோனியைப் பற்றி கனேரியா

"தோனி எப்படிப்பட்ட வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானவை. அவர் உலக கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர். 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, சென்னை சூப்பர் கிங்ஸ் என நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். இது தவிர தோனியின் ஆன் பீல்ட் முடிவுகளால் இந்தியா வெற்றி பெற்ற பல போட்டிகள் உள்ளன.

எதிர்கால இந்திய அணிக்கான கேப்டனை பொறுத்தவரை ஜடேஜாவிடம் ஒப்படைப்பார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் ரோகித் மட்டுமே கேப்டனாக இருப்பது என்பது அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வியை முன்வைக்கும்போது நிச்சயம் தோனி வழிவிட்ட ஜடேஜாவின் பெயரும் இருக்கும் என நம்புகிறேன். ஐபிஎல் போட்டியைப் பொறுத்த வரை நான் சென்னை மற்றும் மும்பை அணிகளை அதிகம் விரும்புகிறேன். ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்களை ஒப்பிடும்போது, ஐபிஎல் திறமையான வீரர்களை இந்திய அணிக்கு கொடுக்கிறது. ஆனால், பிஎஸ்எல் அப்படி கொடுப்பதாக தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | IPL 2022: ரோஹித்தை தோற்கடிப்பாரா பந்த்? யார் யாருக்கு அணியில் வாய்ப்பு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News