இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. அவர் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதற்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். கடைசியாக ஏதாவது ஒரு தொடரில் விளையாடி சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான எந்த போட்டியிலும் விளையாடாமல் திடீரென 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இரவு ஓய்வை அறிவித்தார்.
மேலும் படிக்க | "பும்ரா, ஹர்திக் பாண்டியா கதை அன்னைக்கே முடிஞ்சிக்கும்" - காப்பாற்றிய ரோஹித் சர்மா
அந்த நிமிடங்களை கிரிக்கெட் ரசிகர்களால் இன்று வரை ஜீரணிக்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அந்த நாளை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். அதாவது தோனியின் ஓய்வு என்பது தன்னுடைய கிரிக்கெட் வாழ்கையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தோனி இல்லாத அணியில் விளையாடியபோது, என்ன செய்வது என்றே தனக்கு தெரியவில்லை என்றும், அதனால் பந்துவீச்சு மோசமாகி அணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுதாகவும் கூறியுள்ளார். தோனி போன்ற ஒரு ஐகான் அணியில் இருக்கும்போது எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவர் சொல்வதைக் கேட்டு செயல்பட்டாலே போதும் என்ற நிலையில் இருந்தபோது, அவரின் வெற்றிடம் தன்னை வெகுவாக பாதித்துவிட்டாதக குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
தோனி குறித்து குல்தீப் யாதவ் மேலும் பேசும்போது, " தோனி ஓய்வு அறிவிப்பார் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தோனி இன்னும் விளையாட வேண்டும் என விரும்பினேன். தோனி பாய் போன்று ஒருவர் இருக்கும்போது, பந்துவீசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். தோனி இல்லாதபோது, என்னுடைய ஆட்டம் நன்றாக இருக்கவில்லை. ஒருவர் உங்களை வழிநடத்தும்போது, இயல்பாகவே அவர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருப்பார். அதன்படி நீங்களும் செயல்பட பழகியிருப்பீர்கள். அவர் இல்லாதபோது, மொத்த சுமையும் உங்கள் தோள்பட்டையில் இறங்கும். அப்போது என்ன செய்வதென்றே உங்களுக்கு தெரியாது. உங்களை புரிந்து கொள்ள கொஞ்ச நாளாகும். அதுதான் எனக்கும் நடந்தது" என தெரிவித்தார்.
இப்போது என்னால் தோனி கேப்டனாக இருக்கும்போது செயல்பட்டதுபோல் பந்துவீச முடிவதாகவும் குல்தீப் யாதவ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் குல்தீப் யாதவ் மிக சிறப்பாக செயல்பட்டார். அவரின் இந்த பர்ஃபாமென்ஸ், இனிவரும் போட்டிகளில் இந்திய அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறது.
மேலும் படிக்க | தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியா? டுவைன் பிராவோ முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ