உலகக்கோப்பையில் எத்தனை முறை இந்தியா v ஆப்கானிஸ்தான் மோதி உள்ளனர்

இன்று சவுத்தாம்டனில் நடைபெற உள்ள 28_வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2019, 01:25 PM IST
உலகக்கோப்பையில் எத்தனை முறை இந்தியா v ஆப்கானிஸ்தான் மோதி உள்ளனர் title=

சவுத்தாம்டன்: 2019 உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி ஆடிய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத அணியாக உள்ளது. இதுவரை வெற்றி பெறாத ஆப்கானிஸ்தான் அணியை இன்று இந்தியா எதிர்க்கொள்கிறது.

இங்கிலாந்து: 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. இதுவரை 27 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று நடைபெற உள்ள 28_வது லீக் போட்டி நடைபெறுகிறது. 

இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் எத்தனை முறை மோதி உள்ளது. வெற்றி யாருக்கு? என்பதுக் குறித்து பார்போம்.

உலகக்கோப்பை தொடர்களில் இரு அணிகளும் இரண்டு முறை மோதி உள்ளன. அதில் இந்திய அணி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டம் முடிவு இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷாப் பண்ட் / விஜய் சங்கர், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் / முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா

ஆப்கானிஸ்தான்: இக்ரம் அலி கில், ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஷ்மதுல்லா ஷாஹிடி, குல்படின் நைப், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், அப்தாப் ஆலம் மற்றும் தவ்லத் சத்ரான்

Trending News