சினிமாவில் களமிறங்கும் ஷிகர் தவன் - அதுவும் இப்படியொரு கேரக்டரா?!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் திரைப்படமொன்றில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 17, 2022, 05:52 PM IST
  • ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார் ஷிகர் தவன்.
  • கிரிக்கெட்டைத் தொடர்ந்து சினிமாவிலும் ஷிகர் தவன் களமிறங்கவுள்ளாராம்.
  • முக்கியமான ரோலில் அவர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் களமிறங்கும் ஷிகர் தவன் - அதுவும் இப்படியொரு கேரக்டரா?! title=

இந்தியக் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவன், அணியின் தொடக்க வீரராக இருந்து வருகிறார். ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் தவன் அந்த அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்துவருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் மட்டுமல்லாது சினிமா பக்கமும் தலைகாட்ட முடிவெடுத்துள்ளாராம் தவன். ஆம், பாலிவுட்டில் உருவாகிவரும் படமொன்றில் ஷிகர் தவனும் இணைந்துள்ளாராம். அவர் தொடர்பான காட்சிகள் ஏற்கெனவே எடுத்தும் முடிக்கப்பட்டுவிட்டதாம். வெறுமனே கெஸ்ட் ரோலாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. தவனுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள ரோல் படத்தில் மிக முக்கியமான ஒன்றாம்.

தங்களது படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்று இருப்பதாகவும் அதில் தாங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என படக்குழு அவரை அணுகியதாம். ஷிகர் தவனும் அதற்குப் பச்சைக்கொடி காட்டவே இந்த ப்ராஜெக்ட் அமைந்துள்ளதாம். அதே நேரம் அவர் நடித்துள்ள படத்தின் பெயர் என்ன, மற்ற நடிகர்கள் யார் எனும் விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு கேப்டனாகும் ஷிகர் தவான்!

 

 

இப்படம் நடப்பாண்டிலேயே வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில விளம்பரப் படங்களில் தலைகாட்டியுள்ள தவன், சமூக வலைதளங்களில் சினிமா காட்சிகளை இமிடேட் செய்து வீடியோ வெளியிடுவார். அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தின் வசனத்தை இமிடேட் செய்தும் அண்மையில் அவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் இந்தியக் கிரிக்கெட்டிலிருந்து சினிமாவுக்கு வந்துள்ளோர் பட்டியலில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், இர்பான் பதான் உள்ளிட்டோருடன் தற்போது ஷிகர் தவனும் இணைந்துள்ளார்.

மேலும் படிக்க | ராம் சரணுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? - விஜய் படம் கைவிடப்படுகிறதா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News