விளையாட்டு செய்திகள்: இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. நிறைய புது முக வீரர்களுடன் தவான் தலைமையில் சென்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்ததாக ஆடிய முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனிடையில் இந்திய வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று (Covid-19 Positive) உறுதி செய்யப்பட்டது.
இதனால் கடந்த 27-ம் தேதி நடக்க வேண்டிய டி20 போட்டி தள்ளி வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்த அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் பிரிதிவ்ஷா, மனிஷ் பாண்டே, சஹால், கவுதம், இசான் கிசன் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தனிமை படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 28-ம் தேதி இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் மீதமுள்ள வீரர்களுடன் களம்மிறங்கிய இந்திய அணி தோல்வி அடைந்தது. கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நேற்று கொலும்புவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 ஓவர்களுக்கு வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்தது.
ALSO READ | IND vs SL 3rd T20I: அபார வெற்றியுடன் டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்களில் சாஹல் மற்றும் கவுதமுக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. சிறிது நாட்களுக்கு முன் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடதக்கது.
உள்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 44,230 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளது. இதமூலம் ஒட்டுமொத்த கொரோனா வைரசால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கையை 3,15,72,344 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் ஐந்து மாநிலங்களில் கேரளாவில் 22,064 பேருக்கும், மகாராஷ்டிராவில் 7,242 பேருக்கும், ஆந்திராவில் 2,107 பேருக்கும், கர்நாடகாவில் 2,052 பேருக்கும், தமிழ்நாட்டில் 1,859 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ALSO READ | IND vs SL: டி-20 போட்டி ஒத்திவைப்பு; க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR