இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்துவருகின்றன.ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இறுதி நாளான இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்துவும், கனடாவின் மிச்செல்லா லீயும் எதிர்கொண்டனர். முன்னதாக, 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இறுதி நாளான இன்று பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் சீ யாங்கை எதிர்கொண்டார்.
பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் செட்டை 19-21 என லக்ஷயா கோட்டை விட்டார். இதனையடுத்து சுதாரித்துகொண்ட லக்ஷயா அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற அவர் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 20 தங்கங்கள், 15 வெள்ளிகள், 22 வெண்கலங்கள் என மொத்தம் 57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இன்றைக்கு மட்டும் இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ANOTHER GOLD FOR INDIA
A fantastic showing from Lakshya Sen in the Men's Badminton Singles, adding a 20th Gold medal for India at the games
Well done @WeAreTeamIndia#CommonwealthGames | #B2022 pic.twitter.com/WLDhiRNH1b
— Commonwealth Sport (@thecgf) August 8, 2022
முன்னதாக இன்று பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடந்தது. இதில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல்லா லீயை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியாவின் சிந்து தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் சிந்து வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.
மேலும் படிக்க | CWG 2022: ஆஸ்திரேலியாவிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ