Chris Gayle: இடுப்பு துண்டை கழற்றிய Chris Gayle மீது பாலியல் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமானது. இந்த விளையாட்டுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கிரிக்கெட் வீரர்களுக்கான புகழும் பிரபலமும் மிகவும் அதிகம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 10, 2021, 05:26 AM IST
  • இடுப்பு துண்டை கழற்றிய கிறிஸ் கெய்ல் மீது பாலியல் குற்றச்சாட்டு
  • சர்ச்சைகளின் நாயகன் கெய்ல்
  • மசாஜ் தெரபிஸ்ட் முன் இடுப்புத் துண்டை திறந்து காட்டியதாக கெய்ல் மீது குற்றச்சாட்டு
Chris Gayle: இடுப்பு துண்டை கழற்றிய Chris Gayle மீது பாலியல் குற்றச்சாட்டு! title=

புதுடெல்லி: கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமானது. இந்த விளையாட்டுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கிரிக்கெட் வீரர்களுக்கான புகழும் பிரபலமும் மிகவும் அதிகம்.

ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம். சொந்த விருப்பங்களை நிறைவேற்றுவதும் கடினம், தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதும் சிரமம். 

மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துவதில் பெயர் பெற்றவர். கிறிஸ் கெய்ல் பெரும்பாலும் உலகின் அனைத்து டி 20 கிரிக்கெட் லீக்குகளிலும் விளையாடுகிறார். கிறிஸ் கெய்ல் வெவ்வேறு நாடுகளுக்கு செல்பவர். அவர் ஊர் சுற்றுவதைப் போலவே, அவரை சர்ச்சைகளும் அதிக அளவில் சுற்றுகின்றன.

Also Read | நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹர்பஜன்சிங்.. காரணம் என்ன தெரியுமா..!!

2015 உலகக் கோப்பையின் போது, கிறிஸ் கெய்ல் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மசாஜ் தெரபிஸ்ட் முன், தனது இடுப்புத் துண்டை திறந்து, தனது அந்தரங்க உறுப்பைக் காட்டியதாக கெய்ல் மீது குற்றம் சாட்டப்பட்டது. கிறிஸ் கெய்ல் மீது குற்றம்சாட்டிய பெண், குழந்தையைப் போல அழுதார்.

கெயிலின் உடலில் துண்டு தவிர வேறு எந்த ஆடையும் இல்லை என்ற செய்தியை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை. கிறிஸ் கெய்லைப் பற்றிய இந்த செய்தியை ஃபேர்ஃபாக்ஸ் மீடியா செய்தித்தாள்கள் (Fairfax Media Newspapers), தி சிட்னி மார்னிங் ஹெரால்ட், தி ஏஜ் மற்றும் தி கான்பெர்ரா டைம்ஸ் என பல செய்திகள் இந்த செய்தியை வழங்கின. 

2015 உலகக் கோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெய்ல், வேண்டுமென்றே மசாஜ் தெரபிஸ்ட் மராஸ் லியான் ரஸ்ஸல் (massage therapist Marause Leanne Russell) என்ற பெண்ணின் முன் முன்னால் தனது இடுப்பில் இருந்த துண்டைத் அவிழ்த்திருக்கிறார். அப்போது, கெய்லின் உடலில் அந்தத் துண்டைத் தவிர வேறு எந்த ஆடையுமே இல்லை என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. கெய்ல் இதை வேண்டுமென்றே செய்தார் என்றும் கூறப்படுகிறது.

Also Read | 2020-21-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா தொடர், உலகின் Best Test Series-ICC

இந்த வழக்கின் விசாரணை நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தில் (New South Wales Supreme Court) வந்தது. விசாரணையின்போது, ”நான் ஒரு பொருளை எடுக்க அறைக்கு சென்றபோது, என்ன தேடுகிறாய் என கெய்ல் கேட்டார். நான், டவல் (Towel) என்று சொன்னேன். உடனே கெயில் தனது இடுப்பில் இருந்த துண்டை திறந்தார்” என்று மசாஜ் செய்யும் பெண் குற்றம் சாட்டினார்.

மசாஜ் தெரபிஸ்ட் பெண், 'கிறிஸ் கெயிலின் அந்தரங்கப் பகுதியின் மேல் பகுதியைக் பார்த்தார். உடனே, மன்னிப்புக் கேட்டு விட்டு திரும்பி சென்றுவிட்டார். அவர் உடனே, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் உடற்பயிற்சியாளரிடம் (physiotherapist) சென்று விஷயத்தை தெரிவித்தார்.

'நான் மிகவும் அழுதேன், நான் ஒரு குழந்தையைப் போல அழுதேன். அந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அதன்பிறகு மிகவும் அதிர்ச்சியடைந்த மசாஜ் தெரபிஸ்ட்க்காக பல பெண்கள் குரல் எழுப்பினர். 

'இது போன்ற விஷயங்கள் எப்போதுமே நடக்கும், ஆனால் பாலியல் சீண்டுதலுக்கு எதிராக குரல் எழுப்ப யாருக்கும் தைரியம் இல்லை, ஆனால் உண்மையில் நாம் குரல் எழுப்ப வேண்டும்' என்று கெய்ல் மீது குற்றம் சாட்டும் மசாஜ் நிபுணர் உறுதியாக இருக்கிறார்.

Also Read | Roger Federer பிரெஞ்சு ஓபன் 2021 இலிருந்து விலகிய காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News