மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி: மோசமான ஆட்டத்துக்கு என்ன காரணம்?

சிஎஸ்கேவில் தீபக் சாஹர் காயம் காரணமாக அவதிப்படுகிறார். அவரை விட அவர் இல்லாமல் சிஎஸ்கே அவதிப்படுகிறது. 

Last Updated : Apr 7, 2022, 11:22 AM IST
  • தொடர்ந்து சொதப்பும் ஜாம்பவான் அணிகள்
  • ஹாட்ரிக் தோல்வியில் மும்பை மற்றும் சிஎஸ்கே
  • புள்ளிப்பட்டியலில் பின்தங்கியதால் அதிர்ச்சி
மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி: மோசமான ஆட்டத்துக்கு என்ன காரணம்? title=

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹாட்ரிக் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் பின் தங்கியுள்ளது. இந்த இரு ஜாம்பவான் அணிகளும் சரிவை சந்தித்து வருவது ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Mumbai Twitter

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சிஎஸ்கே அணி 4 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சக்சஸ்புல் அணிகளாக இந்த இரு அணிகளும் தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது. இவர்களுடன் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் கைகோர்த்து கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இது ஒரு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளது. இதுவரை இந்த இரு அணிகளும் ஐபிஎல்லில் இப்படி ஒரு ஹாட்ரிக் தோல்வியை தொடக்கத்தில் சந்தித்தது இல்லை. 

Mumbai Twitter

நேற்றைய போட்டியில் மும்பை அணி கொல்கத்தா அணியிடம் படுதோல்வி அடைந்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே அடித்தது. கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடந்து அவர் சொதப்பி வருவது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர்களிலேயே 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி இந்த சீசனில் முதல் மூன்று ஆட்டங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது. சீக்கிரமாக இந்த அணி மீண்டு எழவில்லை என்றால் அது அந்த அணிக்கு பலவீனமாக மாறிவிடும்.

CSK Twitter

சிஎஸ்கே அணிக்கும் இதே நிலைதான். முதல் போட்டியில் கொல்கத்தாவுடன் மோதி படுதோல்வியை சந்தித்தது. ஆனால் தோனி மட்டும் 50 ரன்களை அடித்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்த முறை ஐபிஎல்லில் இந்த இரு அணிகளும் சொதப்ப முக்கிய காரணம் நட்சத்திர வீரர்களை இழந்தது தான். ஐபிஎல் ஏலத்தில் ஒரு சில வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடிந்த நிலையில், முக்கிய ஆட்டக்காரர்களை இந்த அணிகள் கோட்டை விட்டன. மும்பை அணி பாண்டியா சகோதரர்களை ஏலம் எடுக்காதது மிகப்பெரிய பின்னடைவே. சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக விலகியதும் சிக்கலானது. ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாததும்  மும்பை அணியை பலவீனமாக்கியது. 

சிஎஸ்கேவில் தீபக் சாஹர் காயம் காரணமாக அவதிப்படுகிறார். அவரை விட அவர் இல்லாமல் சிஎஸ்கே அவதிப்படுகிறது. 2021ம் ஆண்டு ஆரஞ்ச் கேப் வென்ற ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெஸ்ஸிஸ் இல்லாதது இந்த அணிக்கு பின்னடைவே. தற்போது டு பிளெஸ்ஸிஸ் பெங்களூரு அணிக்காக அற்புதமாக விளையாடி வருகிறார். இந்த முறை மும்பை, சிஎஸ்கே அணிகள் ஏலத்தில் செய்த தவறு காரணமாக தோல்வியை சந்தித்து வருகின்றன.விரைவில் இந்த அணிகள் தோல்வியில் இருந்து மீண்டு மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News