உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் பிரக்யானந்தா

18 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார் பிரக்யானந்தா.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 13, 2019, 02:08 PM IST
உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் பிரக்யானந்தா title=

மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்யானந்தா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதாவது 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற 10வது சுற்றில் லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்ட தமிழகத்தை சேர்ந்த பிரக்யானந்தா 63_வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் மொத்தம் 8.5 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் 8 புள்ளி பெற்றிருந்தார். 

 

இந்தநிலையில், இன்று 11 மற்றும் இறுதி சுற்று ஆட்டம் நடைபெற்றது. ஜெர்மனியை சேர்ந்த வாலண்டின் பக்கெல்ஸ்க்கு எதிராக விளையாடி 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இந்த அடிப்படையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார் பிரக்யானந்தா.

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரக்யானந்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Trending News