IND vs AUS: உலக கோப்பையை இப்பவே இந்தியாவுக்கு கொடுத்துடலாம் - ஏன் தெரியுமா?

இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இப்போது செம ஃபார்மில் இருப்பதால் உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 24, 2023, 06:38 PM IST
  • உட்சபட்ச பார்மில் இந்திய அணி
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரம்
  • உலக கோப்பை வாய்ப்பு பிரகாசம்
IND vs AUS: உலக கோப்பையை இப்பவே இந்தியாவுக்கு கொடுத்துடலாம் - ஏன் தெரியுமா?  title=

இந்தியாவில் உலக கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில், அக்டோபர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய அணி முதல் போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் அப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த மண்ணிலேயே ஒருநாள் உலக கோப்பையை இந்திய அணி விளையாடுவதால் இம்முறையும் சாம்பியனாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சொந்த நாட்டில் விளையாடுவது மட்டுமே இந்தியாவுக்கான வாய்ப்பா? என்றால் நிச்சயம் கிடையாது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணி இப்போது உட்சபட்ச பார்மில் இருக்கிறது. அதனால், மற்ற அணிகளை ஒப்பிடும்போது இந்தியாவுக்கான வாய்ப்பு ஒரு படி அதிகமாக இருக்கிறது. 

மேலும் படிக்க | ஷ்ரேயாஸ் ஐயர் மிரட்டல் சதம்... உலகக் கோப்பையில் இனி இந்த முக்கிய வீரருக்கு வாய்ப்பே இல்லை

இந்திய அணியின் பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ஏற்கனவே கூறியதுபோல் உட்சபட்ச பார்மில் இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்ய குமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டாப் கிளாஸ் பார்மில் இருக்கிறார்கள். காயத்தால் நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல் ஆசிய கோப்பையில் அபாரமாக விளையாடி தன்னுடைய கம்பேக்கை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் கலக்கலான ஒரு அரைசதத்தை அடித்திருக்கிறார்.

ஸ்ரேயாஸ் - சூர்ய குமார் விளாசல்

அவரைப் போலவே மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமாக ஆடி சதமடித்தார். அவரும் காயத்துக்குப் பிறகு நேரடியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் தான் களமிறங்கினார். முதல் போட்டியில் ரன் அவுட்டானாலும் இப்போட்டியில் ஆரம்பம் முதலே அடித்து விளையாடி சதம் அடித்தார் ஸ்ரேயாஸ் அய்யர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்ய குமார் யாதவும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். 

சூப்பர் பார்மில் சுப்மான் கில்

இவர்களுக்கு எல்லாம் உட்சபட்சமாக சுப்மான் கில் இப்போது சூப்பர் பார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இப்போட்டியிலும் சதமடித்து பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். அவருடைய பார்முக்கு நிகராக இஷான் கிஷனும் பேட்டிங்கில் சிறப்பாக பங்களிப்பு செய்து வருகிறார். 2வது ஒருநாள் போட்டியில் 18 பந்துகள் மட்டுமே விளையாடிய அவர் 31 ரன்கள் குவித்தார். இப்படி வரிசையாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து தங்களின் டாப் கிளாஸ் பார்மை நிரூபித்துள்ளனர். 

இந்திய அணியின் பந்துவீச்சு 

பேட்டிங்கைப் போலவே இந்திய அணியின் பந்துவீச்சும் மிக அருமையாக இருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு திரும்பியிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, ஆசிய கோப்பையில் அருமையாக பந்துவீசினார். அவருக்கு பக்கபலமாக முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோரும் டாப் கிளாஸ் பார்மில் இருக்கின்றனர். சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இப்படி எல்லா துறையிலும் இந்திய அணி டாப் கிளாஸில் இருப்பதால் இம்முறை உலக கோப்பையும் நிச்சயம் இந்திய அணிக்கே என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

மேலும் படிக்க | IND vs AUS: இந்தியா, ஆஸ்திரேலியா எத்தனை முறை 400 ரன்கள் அடிச்சிருக்காங்க தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News