வணிகம் மற்றும் திறன் வளர்ச்சி தொடர்பான புத்தகங்களை, தமிழில் ஆடியோ வடிவில் வழங்கும் செயலி 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக முதலீட்டை தற்போது பெற்றுள்ளது. Cultiv8 Incubator நிறுவனத்தின் Overseas accelerator program கீழ் மேஜிக் 20 தமிழ் நிறுவனம் மத்திய அரசின் National Initiative for Developing and Harnessing Innovations (NIDHI) Startup Support Scheme (sss) திட்டத்தில் முதலீட்டை பெற்றுள்ளது.
Cultiv8 Incubator (கல்டிவ்8 இன்குபேட்டர்) நிறுவனம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனம், சிறப்பான செயல்திட்டம் மூலம் முதல்கட்ட நிதியை பெற்றுள்ளது. கல்டிவேட் இன்குபேட்டர் நிறுவனம், 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலமாக வளர்ச்சியை அதிகரிக்கும் பணியை மேற்கொண்டது.
மேஜிக் 20 தமிழ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி
மேஜிக் 20 தமிழ் நிறுவனத்தின் நிறுவனர் அருண் பாரதி கூறுகையில், "கல்டிவ்8 இன்குபேட்டர் நிறுவனம் நடத்திய ஸ்டார்ட் அப்-களுக்கான நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்டது தங்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியது" என்றார். இந்நிகழ்ச்சி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சிறந்த தளமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் கற்றல், வளர்ச்சி, மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றுக்கு பெறிதும் உதவும். NIDHI SSS திட்டத்தின் பெறப்பட்டுள்ள இந்த நிதியானது, நிறுவனத்தின் நிதி தேவைகளுக்கும், எதிர்கால வளர்ச்சி திட்டங்களை உருவாக்குவதற்க்கும் பயனளிக்கும் என்றார்.
மேலும் படிக்க | Ban Tungsten: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தடைக்கோரி... மதுரையில் மாபெரும் போராட்டம்
நிறுவனத்தின் எதிர்கால பயணத்தில் புதிய உற்சாகம் தரும் என மேஜிக் 20 தமிழ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வாசு கார்த்திகேயன் கூறினார். கல்டிவ்8 இன்குபேட்டர் மற்றும் NIDHI SSS ஃபண்ட் ஆகிய இரண்டின் ஆதரவுடன், இந்த ஆடியோ வடிவிலான இந்த ஆடியோ புக் துறையில் வெற்றியடைவதற்கும், தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
புதுமைகளை புகுத்த...
மேஜிக் 20 தமிழ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பாலாஜி பிச்சுமணி இதுகுறித்து கூறுகையில், "எங்களின் துறையில் புதுமைகளை புகுத்துவதற்கு தேவையான உற்சாகமும், ஆதாரவும், வழிகாட்டலும் கிடைத்துள்ளது,' என்றார். கல்டிவ்8 இன்குபேட்டர் அமைப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் உத்திகளைச் செம்மைப்படுத்தவும், சந்தை நுண்ணறிவுகளைப் பெறவும், நெட்வொர்க்குகளை அணுகுவதற்கும் தேவையான அணுகுமுறையை வழங்கி வருகிறது.
கல்டிவ்8 இன்குபேட்டர், மேஜிக் 20 தமிழ் இணைந்து தொடர்ந்து புதுமைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேஜிக்கை அளவிடுவதில் NIDHI SSS நிதியத்தின் நிதி முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேஜிக் 20 தமிழ் வணிகம், தயாரிப்பு மேம்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் அதன் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளும். இந்த முதலீடு புதுமையான ஸ்டார்ட்அப்களை வளர்ப்பதற்கும், இந்தியாவின் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ