IPL 2023 : ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு... வெளிநாட்டு வீரருக்கு வந்த சோதனை... ஐபிஎல்லில் பங்கேற்பது சந்தேகம்!

இம்மாதம் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் ஏலத்தில் எடுக்க காத்திருக்கும் வெளிநாட்டு வீர்ர ஒருவர், வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 5, 2022, 03:59 PM IST
  • ஐபிஎல் ஏலம் இம்மாதம் 23அம் தேதி கொச்சியில் நடக்கிறது.
  • வரும் ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவில் நடக்கிறது.
  • வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களுக்கு ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
IPL 2023 : ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு... வெளிநாட்டு வீரருக்கு வந்த சோதனை... ஐபிஎல்லில் பங்கேற்பது சந்தேகம்! title=

15ஆவது ஐபிஎல் சீசன் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. வழக்கமாக மூன்று சீசன்களுக்கு ஒருமுறை மெகா ஏலம், ஒவ்வொரு சீசனுக்கு இடையில் மினி ஏலமும் நடைபெறும். 

கடந்த சீசனையொட்டி, மெகா ஏலம் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சீசனுக்காக தற்போது மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலம் வரும் டிச. 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து, ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் அடிப்படை தொகை விவரங்களும் சமீபத்தில் வெளியாகின. ரூ. 2 கோடியில் இருநிது, பல்வேறு தொகைகளின்கீழ் வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். 

இந்த ஏலத்தில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீர்ரகளின் மீதுதான் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சாம் கரன், பென் ஸ்டாகோஸ், கேம்ரூன் க்ரீன் உள்ளிட்டோர் அதிக தொகைகளில் ஏலம் எடுக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், டி20 ஸ்பெஷலிஸ்டான இவர்கள் பேட்டிங், பௌலிங் என ஆல்-ரவுண்ட் திறனுடையவர்கள்.

மேலும், அவர்களின் அடிப்படை தொகை ரூ. 2 கோடியாக உள்ளது. எனவே, தங்கள் அணியை வலுவாக்க மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா என முன்னணி அணிகள் உள்பட அனைத்து அணிகளும் இவர்களை ஏலம் எடுக்க முயற்சிக்கும்.

இந்நிலையில், அதிகம் எதிர்பார்ப்பின்கீழ் இருக்கும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் 2023 தொடர் வரையில் கேமரூன் கிரீனின் பணிச்சுமை குறித்து ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் பங்கேற்பது குறித்த முடிவு என்பது தொடரின் நாள் நெருங்கும்போதுதான்  உறுதியாகும் எனவும் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்,"அடுத்த 12 மாதங்களில் கிரிக்கெட்டில் கிரீனின் ஒட்டுமொத்த பணிச்சுமை கவலைக்குரியதா? ஆமாம், ஒவ்வொரு வீரருக்கும் இது பொருந்தும் என்று நான் நினைக்கிறேன்.

மேலும் படிக்க | IPL Auction : இவர்களுக்கு ரூ. 1 கோடியா...? ; முக்கிய வீரர்களின் அடிப்படைத் தொகை - முழு விவரம்!

நாங்கள் பலமுறை அதைப் பற்றி பேசியுள்ளோம். ஐபிஎல் தொடருக்கு முன்பு அவர் நிறைய போட்டிகளில் விளையாட உள்ளார். அவருடைய இப்போது எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ஐபிஎல் நெருங்கும்போது தான் அவர் சரியான முடிவை எடுக்க முடியும். 

ஐபிஎல் தொடருக்கு முன் ஒன்பது டெஸ்ட் போட்டிகள் மற்றும் சில வெள்ளை பந்து போட்டிகள் என ஐபிஎல் தொடருக்கு முன் இத்தனை போட்டிகளை விளையாடும்போது, அவரின் உடல்நிலை மூன்று மாதங்களுக்கு பின் எப்படி இருக்கும் என்பது யாராலும் கூற முடியாது" என்றார். 

பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. தொடர்ந்து, இங்கிலாந்தில் ஜூன் - ஜூலை மாதங்களில் ஆஷஸ் தொடர் நடைபெறும். இதன் நடுவே ஐபிஎல் தொடர் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். 

எனவே, தொடர்ச்சியாக ஒருவர் இத்தனை போட்டிகளில் விளையாடுவது என்பது பெரிய சிரமத்திற்கு உள்ளாக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான வார்னரும், க்ரீனை ஒருமுறை சரியான முடிவை எடுக்கும்படி எச்சரித்திருந்தார். அதேபோன்று, ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் வரும் ஐபிஎல்  தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | என்னது சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் ஜடேஜா இல்லையா? புதிய ட்விஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News