IND vs AUS: ஆடி பாடும் வார்னருக்கு குட்பை... புது அஸ்திரத்தை கையிலெடுக்கும் ஆஸ்திரேலியா

IND vs AUS: முதல் போட்டியில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்த நிலையில், அடுத்த போட்டிக்கு அந்த அணியின் புது திட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 12, 2023, 03:14 PM IST
  • முதல் போட்டியின் ஆட்டநாயகன், ஜடேஜா.
  • இந்தியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை.
  • அடுத்த போட்டி பிப். 17ஆம் தேதி நடைபெறுகிறது.
IND vs AUS: ஆடி பாடும் வார்னருக்கு குட்பை... புது அஸ்திரத்தை கையிலெடுக்கும் ஆஸ்திரேலியா title=

Border Gavaskar Trophy, IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த பிப். 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, 3 நாள்களில் போட்டியை முடித்துவைத்தது. 

மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, 70 ரன்களை குவித்த ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி , 64 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 177 ரன்களை எடுத்தது. ஆனால், இந்திய அணி 400 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வினின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா 91 ரன்களில் சுருண்டது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 

அந்த வகையில், ஆஸ்திரேலியா பேட்டிங் ஆர்டர் மேல் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது. பேட்டிங் தரவரிசையில் தலைசிறந்து விளங்கும் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்திய சுழற்பந்துவீச்சுக்கு பதுங்கி  பதுங்கி விளையாடியது; சிறப்பான ஃபார்மில் இருந்து ட்ராவிஸ் ஹெட்டை அணியில் சேர்க்காதது; சுழற்பந்துவீச்சுக்கு தகுதியான பேட்டர்களுக்கு வாய்ப்பளிக்காதது என பல குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | IND vs AUS: KL ராகுல் அணியில் எதற்கு? வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!

வரும் பிப். 17ஆம் தேதி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அடுத்த போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராக ஆஸ்திரேலியா பல திட்டங்களை தற்போதே வகுக்க தொடங்கியிருக்கும். குறிப்பாக, அணி தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ட்ராவிஸ் ஹெட், உள்ளூரில்  அபாரமாக விளையாடினார். இந்தியா சுற்றுப்பயணத்திற்கு முன், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி வந்தார். 

ஆனால், இந்திய தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. இது பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால், இரண்டாவது போட்டியில், தொடக்க வீரர் வார்னருக்கு பதில் ஹெட் சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வார்னர் முதல் போட்டியில் 1 மற்றும் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

மேலும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவை போன்று 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மாட் குஹ்னேமன் என்பவரை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. லயான், முதல் போட்டியில் அறிமுகமான மர்பி ஆகியோருடன் குஹ்னேமனும் இந்தியா அணி மீது சுழல் தாக்குதல் தொடுக்க காத்திருக்கிறது. 

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சுழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களை களமிறக்கி, சரியான திட்டத்தை வகுத்தது என்றால் இந்தியாவை வீழ்த்த வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | IPL 2023: ஓய்வை அறிவிக்கும் தோனி... சிஎஸ்கேவின் வருங்காலம் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News