இதில் முதல் சுற்று போட்டிகள் கடந்த செப். 5 முதல் செப். 9ஆம் தேதி வரை நடைபெற்றன. India A அணிக்கு எதிராக India B அணியும், India D அணிக்கு எதிராக India C அணியும் வெற்றி வாகை சூடின. நெட் ரன்ரேட் அடிப்படையில் தற்போது புள்ளிப்பட்டியலில் India C அணி முதலிடத்திலும், India B அணி இரண்டாம் இடத்திலும், India A மற்றும் India D அணிகள் முறையே 3, 4வது இடத்தில் உள்ளன. மூன்று சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
ஷம்ஸ் முலானி நிதானம்
அந்த வகையில், இன்று இரண்டாம் சுற்று போட்டிகள் தொடங்கின. இந்த சுற்றின் இரு போட்டிகளும் ஆந்திராவின் அனந்தபூர் நகரில் நடைபெறுகின்றன. India A - India D அணிகளுக்கு இடையிலான போட்டி நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், India B - India C அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு நேரடி ஒளிபரப்பு இல்லை.
மேலும் படிக்க | சிறுவனாக இருந்தபோது என்னை கடத்தி சென்று எதிரணி வீரர்கள் மிரட்டினர் - அஸ்வின்
முதல் போட்டியில் டாஸ் வென்ற D அணி, A அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இன்றைய ஆட்ட நேர முடிவில் India A அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக 7ஆவது வீரராக களமிறங்கிய ஷம்ஸ் முலானி 88 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். India D பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, வித்வத் கவேரப்பா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சரண்ஷ் சிங் மற்றும் சௌரப் குமார் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 18 ஓவர்களில் 73 ரன்களை வாரிவழங்கி உள்ளார்.
மிரட்டிய இஷான் கிஷன்
மறுபுறம், டாஸ் வென்ற India B அணி முதலில் India C அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த Team C இன்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 357 ரன்களை குவித்துள்ளது. அதில் தற்போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். India C பேட்டிங் தரப்பில் இஷான் கிஷன் (Ishan Kishan) 111 ரன்களையும், பாபா இந்திரஜித் 78 ரன்களையும் குவித்தனர். India B பந்துவீச்சில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ராகுல் சஹால், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இதில் இஷான் கிஷன் துலீப் டிராபி தொடரில் India D அணிக்குதான் விளையாட இருந்தார். முதல் போட்டியில் சில காரணங்களாக விளையாடாத அவர், இன்றைய போட்டியில் India C அணிக்காக களமிறங்கியது ஆச்சர்யத்தை அளித்தது. India D அணியில் தற்போது சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு இந்திய அணிக்கு சர்வதேச அளவில் விளையாடாத இஷான் கிஷனை இந்தாண்டுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியது.
மன சோர்வு காரணமாக சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாக தென்னாப்பிரிக்காவில் இருந்து இஷான் கிஷன் கடந்தாண்டு நாடு திரும்பினார். அதன் பின் இந்திய அணிக்கு அவர் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இஷான் கிஷனும், ஷ்ரேயாஸ் ஐயரும் ரஞ்சி டிராபியில் விளையாடாத நிலையில் அவர்களை ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியது. டி20 உலகக் கோப்பை அணியில் கூட இஷான் கிஷனுக்கு வாய்ப்பில்லாமல் போனது.
மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த தோனி இவரு, கொஞ்சம் உஷாரு - எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்
இஷான் கிஷனுக்கு கடும் நெருக்கடி
ஓடிஐயில் இரட்டைச் சதம் அடித்து நட்சத்திர வீரராக திகழ்ந்த இவரை ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கும் என யாரும் நினைக்கவில்லை. சற்றே பார்ம் அவுட்டான நிலையிலும், ரிஷப் பண்டின் வருகைக்கு பின்னரும் இஷான் கிஷனை இந்திய அணி சார்ந்திருக்கவில்லை. டி20இல் ஜித்தேஷ் சர்மா, ஓடிஐயில் ராகுல், சஞ்சு சாம்சன், டெஸ்டில் கேஎஸ் பரத், துருவ் ஜூரேல் என இவருக்கு போட்டியும் அதிகமானதால் இவருக்கு இந்திய அணியில் நீண்ட மாதங்களாக வாய்ப்பே கிடைக்கவில்லை.
மேலும், தற்போதைய நீண்ட டெஸ்ட் சீசனில் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் தொடர்களில் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, புச்சிபாபு தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இருந்து முதல் போட்டியிலேயே சதம் அடித்து மிரட்டினார் இஷான் கிஷன். அதன்பின், துலீப் டிராபியிலும் வெளுத்து வாங்குவார், அப்படியே இந்திய அணிக்கும் தேர்வாகிவிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.
மீண்டும் வேண்டும் இஷான் கிஷன்
துலீப் டிராபியின் முதல் போட்டியை அவரும் தவறவிட, இரண்டாவது போட்டியில் களமிறங்கிய உடனேயே அதிரடியாக சதம் அடித்து, தான் யார் என்பதை தேர்வுக்குழுவுக்கு நிரூபித்துள்ளார். இன்று அவர் 126 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி 111 ரன்களை எடுத்துள்ளார். இவரின் அதிரடி ஆட்டத்தைக் கண்ட ரசிகர்கள் இஷான் கிஷனை தண்டித்தது போதும் எனவும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பேக்அப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனை வைத்துக்கொள்ள கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் (Ajit Agarkar) காதுகளுக்கும், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கவனத்திற்கும் போகும்பட்சத்தில் இஷான் கிஷனை மீண்டும் சர்வதேச அரங்கில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | இந்த 3 வங்கதேச வீரர்கள்... இந்திய அணி ஜாக்கிரதையாக இருக்கணும் - இல்லனா சிக்கல் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ