பாரபட்சம் காட்ட வேண்டாம்... ஐசிசிக்கு ரோஹித் வைத்த செக்... முழு விவரம்

India National Cricket Team: ஐசிசி போட்டி நடுவர்கள் ஆடுகளங்களை மதிப்பிடும்போது, நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 5, 2024, 11:01 AM IST
  • டெஸ்ட் தொடரை சமன் செய்தது இந்திய அணி
  • பும்ரா, டீன் எல்கர் தொடர் நாயகன் விருதை வென்றனர்.
  • டீன் எல்கர் நேற்றோடு ஓய்வு பெற்றார்.
பாரபட்சம் காட்ட வேண்டாம்... ஐசிசிக்கு ரோஹித் வைத்த செக்... முழு விவரம் title=

India National Cricket Team: தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி தனது நீண்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என இந்திய அணி சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரோஹித் சர்மா என மூன்று தலைமையின் கீழ் விளையாடியது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இறுதியாக, டெஸ்ட் தொடரும் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

ரோஹித் சர்மா சாதனை

நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஒன்றரை நாளில் நேற்றோடு நிறைவடைந்தது. அதுவும் குறிப்பாக முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் மொத்தம் 40 விக்கெட்டுகளில், 23 விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக விழுந்தது. தொடர்ந்து, நேற்றைய ஆட்டத்தில் மார்க்ரம் சிறப்பான சதத்தை அடித்து ஆறுதல் அளித்தாலும், அந்த அணியால் இந்திய அணிக்கு 79 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் அவுட்டாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியது.

மேலும், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. தோனிக்கு பிறகு தென்னாப்பிரிக்கா மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தவர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். தொடர் நாயகன் விருதை பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகியோர் பகிர்ந்து பெற்றுக்கொண்டனர். டெஸ்ட் கோப்பையும் இரு அணிகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. டீன் எல்கர் நேற்றைய தினத்தோடு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 

மேலும் படிக்க | IND vs AFG: மீண்டும் டி20 அணியில் விராட், ரோஹித்! யார் யாருக்கு வாய்ப்பு?

சவாலானது...

இந்நிலையில், வெற்றிக்கு பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற டர்பன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் (Team India) கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அதில், இந்திய துணைக் கண்டத்திற்கு வெளியே உள்ள ஆடுகள மதிப்பீடுகள் குறித்து மேலும் நடுநிலை அணுகுமுறையை எடுக்குமாறு ஐசிசி போட்டி அதிகாரிகளிடம் ரோஹித் சர்மா (Rohit Sharma) கேட்டுக்கொண்டார். 

அதில்,"இந்த டெஸ்ட் போட்டியில் என்ன நடந்தது, ஆடுகளம் எப்படி இருந்தது என்பதை அனைவரும் பார்த்தோம். சத்தியமாக இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தியாவிற்கு வரும்போது அனைவரும் அமைதியாக இருக்கும்பட்சத்தில் இதில் விளையாடலாம். ஆம், இது ஆபத்தானது, சவாலானது. இந்தியாவிற்கு வரும்போது, அதுவும் சவாலானது.

டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட நீங்கள் இங்கு வரும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுகிறீர்கள், அதன் பிறகு நீங்கள் அதற்குத் துணை நிற்க வேண்டும். நீங்கள் வந்து எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவில், முதல் நாள் ஆடுகளம் திரும்பத் தொடங்கும். அவர்கள் 'புழுதி, தூசி' என்று பேசுகிறார்கள். இங்கு விரிசல் ஏற்பட்டது.

வேண்டும் நடுநிலை

நடுநிலையாக இருப்பது முக்கியம், குறிப்பாக போட்டி நடுவர்கள். சில போட்டி நடுவர்கள் ஆடுகளங்களை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதில் கவனம் வைத்திருக்க வேண்டும். உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஆடுகளம் 'சராசரிக்கும் கீழே' மதிப்பிடப்பட்டது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அது எப்படி மோசமான ஆடுகளமாக இருக்க முடியும்?”என்றார் ரோஹித் சர்மா. ஆனால் அதனை சராசரி ஆடுகளம் என்றே ஐசிசி மதிப்பிட்டிருந்தது. 

"ஐசிசி (International Cricket Council) மற்றும் நடுவர்கள் இதைப் பார்க்கத் தொடங்க வேண்டும். பிட்சுகளை அவர்கள் பார்க்கும் விதத்தின் அடிப்படையில் மதிப்பிடுங்கள் மற்றும் நாடுகளின் அடிப்படையில் அல்ல. இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.

ஆடுகளம் எவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க விரும்புகிறேன். நான் இப்போது அதைப் பார்க்க விரும்புகிறேன். ஐசிசி பிட்ச்களை எவ்வாறு மதிப்பிடுகின்றன என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். மும்பை, பெங்களூரு, கேப் டவுன், செஞ்சுரியன், அனைத்தும் வேறுபட்டவை. பிட்ச்கள் மோசமடைகின்றன. வேகமான, மேல்நிலை நிலைமைகள் வேறுபட்டவை. 

நான் இப்போது கிரிக்கெட்டை போதுமான அளவு பார்த்திருக்கிறேன். இந்த மேட்ச் ரெஃப்ரிகள் இந்த மதிப்பீடுகளை எப்படி பார்க்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் எப்படி கவனிக்க விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்," என்றார்.

மேலும் படிக்க | INDvsSA 2nd Test: 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி.. ஆனாலும் ஒரே ஒரு குறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News