IPL Auction 2024: 17ஆவது ஐபிஎல் சீசனை முன்னிட்டு நடத்தப்படும் மினி ஏலம் துபாய் கோகோ கோலா அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு வெளியே முதல்முறையாக ஏலம் நடைபெறுகிறது. தொடர்ந்து 333 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ள நிலையில் 77 வீரர்களின் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.
ஏலத்தின் முக்கிய வீரர்கள் யார் யார்?
ஐபிஎல் ஏலம் மீது பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்ததற்கு முக்கிய காரணம் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை, குஜராத் டைட்டன்ஸிடம் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதும், அதன்பின் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதும்தான் எனலாம்.
மேலும், இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளதாலும் ஏலம் குறித்து எதிர்பார்ப்புகள் உள்ளன. அதில் முக்கிய வீரர்கள் என்றால் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, ஜெரால்டு கோட்ஸி, பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் ஆகியோரை சொல்லலாம். இவர்கள்தான் இந்த ஏலத்தின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.
மேலும் படிக்க | IPL Auction 2024: ஐபிஎல் ஏலம் எங்கே, எப்போது, எப்படி பார்ப்பது?
இந்தியர்களில் யார் முக்கியமானவர்கள்?
இவர்களின் செட்தான் முதலில் ஏலம் விடப்படும் என கூறப்படுகிறது. இதில், வெளிநாட்டு ஆல்-ரவுண்டர், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் என பல்வேறு அணிகளுக்கு பல தேவைகள் உள்ளன. குறிப்பாக, குஜராத், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் அதிக தொகையை வைத்திருப்பதால் இதில் முக்கி வீரர்களை எடுக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
அடுத்த முக்கிய வீரர்களாக உள்ள இந்தியர்களில் கருண் நாயர், மனீஷ் பாண்டே, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஷாருக் கான், ஷர்ஷல் படேல், ஷிவம் மாவி, ஹிருத்திக் சோகீன், சிம்ரன்ஜித் சிங் உள்ளிட்டோரை கூறலாம். மேலும், இந்திய தேசிய அணியில் விளையாடாமல் உள்ளூர் போட்டிகளில் பிரபலமடைந்த Uncapped Players ஏராளமானோர் ஐபிஎல் அணிகளில் இடம்பிடிக்க நம்பிக்கை உடன் காத்திருக்கின்றனர்.
எங்கு திரும்பினாலும் ஐபிஎல் ஏலம் குறித்த பேச்சுகள் இருந்து வரும் சூழலில், இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) அவரது யூ-ட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். நேற்றிரவு நேரலையில் வந்த அந்த வீடியோவில் அவர் ஐபிஎல் ஏலம் குறித்து அவரது நண்பரும், கிரிக்கெட் வல்லுநருமான பிரசன்னா (Pdogg) உடன் விவாதம் மேற்கொண்டார்.
'எது ரூ.18 கோடியா...'
பல்வேறு வீரர்கள் குறித்தும், அணிகள் குறித்தும், திரைமறைவில் அணிகளுக்கு இடையே நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் பிரசன்னா பல்வேறு தகவல்களை அதில் பகிர்ந்துகொண்டார். அந்த வகையில், தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்டு கோட்ஸி (Gerald Coetzee) ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இந்நிலையில், கோட்ஸி சுமார் ரூ.18 கோடி வரை ஏலம் போவார் என பிரசன்னா தனது கருத்தை தெரிவித்தார். குறிப்பாக, கோட்ஸி கடந்த முறை ஏலம் போகவில்லை.
அதற்கு பதில் அளித்த அஸ்வின்,"எது ரூ.18 கோடியா... கோட்ஸி நல்ல பந்துவீச்சாளர்தான். இருந்தாலும் அணிகள் அவ்வளவு தூரம் செல்லாது. அவர் ஐபிஎல் அரங்கில் எப்படி செயல்படுகிறார் என பார்க்க வேண்டும். அவர் ஐபிஎல் தொடருக்கு ஏற்றாற்போல் மாற சற்று நேரம் எடுக்கலாம். அவரை 8 கோடி ரூபாய் வரை எடுக்க வாய்ப்புள்ளது, 18 கோடி ரூபாய்க்கு யாரும் அவரை எடுக்க வாய்ப்பில்லை, நாம் கணிப்பது தவறாகக் கூட இருக்கலாம்" என்றார்.
மேலும் படிக்க | IPL 2024 மினி ஏலத்தில் சிஎஸ்கே குறி வைக்கும் 4 வீரர்கள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ