IPL 2024 Play Off Prediction: இந்தியன் பிரீமீயர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் (IPL 2024) கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, இந்தியாவின் 13 நகரங்களில் நடைபெற்று வரும் இந்த தொடர் வரும் மே 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 40 லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாத காலம் ஐபிஎல் தொடர் உச்சக்கட்ட பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடைபெறும் எனலாம்.
மகேந்திர சிங் தோனிக்கு (Mahendra Singh Dhoni) கடைசி சீசன், டி20 உலகக் கோப்பைக்கு முன் நடைபெறும் தொடர் என நடப்பு ஐபிஎல் தொடர் மீது பல்வேறு வகையிலான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு தொடரின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதாவது, 10 அணிகளும் தற்போது 7 லீக் ஆட்டங்களுக்கு மேல் விளையாடிவிட்டன.
கணிப்புகளை அள்ளிவீசும் வல்லுநர்கள்
அந்த வகையில் தற்போதைய சூழலில் ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகள் முதல் நான்கு இடத்தை பிடித்துள்ளன. இந்த அணிகள் கடைசி வரை இந்த இடங்களை தக்கவைக்குமா என்பது கேள்விக்குறியே... குறிப்பாக, சிஎஸ்கே (CSK), குஜராத், டெல்லி, மும்பை உள்ளிட்ட அணிகள் சற்றே ஏற்ற இறக்கத்துடன் விளையாடி வருவதால் எந்த அணி சட்டென டாப்புக்கு போகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது, இதுதான் ஐபிஎல் போன்ற நீண்ட தொடரின் அழகு என்றும் கூறலாம்.
இதில் ராஜஸ்தான் அணி பிளேஆப் சுற்றுக்கு ஏறத்தாழ தகுதிபெற்றுவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 6 போட்டிகள் இருக்கிறது. இதில் ஒன்றிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே போதும் எனலாம். கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் எனலாம். இத்தகைய சூழலில் கிரிக்கெட் வல்லுநர்கள் இரண்டு வகையில் தங்களின் கணிப்புகளை அள்ளிவீசி வருகின்றனர்.
இந்த 4 அணிகள்
ஒன்று, நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடியதை வைத்து வரும் டி20 உலகக் கோப்பைக்கான (ICC T20 World Cup 2024) இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பதை கணிக்க இந்திய மூத்த வீரர்கள் மட்டுமின்றி மூத்த சர்வதேச வீரர்களும் முனைப்போடு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருப்பது தவிர்க்க இயலாது. அதேபோல தான், நடப்பு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை தொடர்ந்து பலரும் கணித்து வருகின்றனர்.
காரணம் என்ன?
இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான நவ்ஜோத் சிங் சித்து (Novjot Singh Sidhu Prediction) நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகள் குறித்த தனது கணிப்பை தெரிவித்துள்ளார். இதில் சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அல்லது மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என தெரிவித்துள்ளார்.
அதாவது, சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்றும் ஹைதராபாத் அல்லது மும்பை அணிகளுள் ஒன்று தகுதிபெறும் எனவும் கூறியுள்ளார். அதாவது, ஹைதராபாத் அதிரடியாக விளையாடினாலும் இன்னும் நிறைய போட்டிகள் உள்ளதால் அந்த அணியின் செயல்பாடை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் மும்பை அணி அதன் பந்துவீச்சை பலப்படுத்தி வந்துவிட்டால் அந்த அணியையும் யாராலும் தடுக்க முடியாது, கடினமான சூழலிலும் மீண்டு வருவது மும்பை அணியின் இயல்பாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ