IPL 2024 Play Off: 17வது ஐபிஎல் லீக் சுற்று கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 26ஆம் தேதி அதே சென்னையில் பிரம்மாண்ட இறுதிப்போட்டியுடன் நிறைவடைய உள்ளது. அந்த வகையில், தொடரின் 10 அணிகளும் மோதும் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
மொத்தம் நடந்த 70 லீக் போட்டிகளில் 10 அணிகளும் தலா 14 போட்டிகளை விளையாடின. அதில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இது நேற்றே உறுதியாகிவிட்டது.
ஐபிஎல் 2024 பிளே ஆப் சுற்று
பிளே ஆப் சுற்றில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தை பிடித்த அணிகள் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவார்கள். தோல்வியடைந்தவர்கள் குவாலிஃபயர் 1 போட்டிக்கு செல்வார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்த அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் குவாலிஃபயர் 2 போட்டியில் மோதும். எலிமினேட்டரில் தோல்வியடையும் அணி அப்படியே வெளியேறிவிடும்.
ஹைதராபாத் ஹேப்பி
அந்த வகையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளிலும் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா உடன் எந்த அணி குவாலிஃபயர் 1 போட்டியில் மோதப்போகிறது என்பதை தீர்மானிக்கவே நடந்தது எனலாம். மாலை நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி பஞ்சாபை வீழ்த்தி 17 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு சென்றது.
பாவம் ராஜஸ்தான்
இதனால், இரவு நடைபெற இருந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே 2வது இடத்திற்கு செல்ல இயலும் என கூறப்பட்டது. இருப்பினும், மழையால் ஆட்டம் முழுமையாக ரத்தாகி ராஜஸ்தான் அணியும் 17 புள்ளிகளை பெற்று நெட் ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்திலேயே நிறைவு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வீசப்பட்டு கொல்கத்தா பந்துவீச முடிவெடுத்தாலும் அதன்பின் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை பாதித்தது.
குவாலிஃபயர் 1
இதன்மூலம், வரும் மே 21ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் அகமதாபாத் நகரில் நடைபெறும் குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
Kolkata Knight Riders Sunrisers Hyderabad#TATAIPL | #KKRvSRH | #Qualifier1 | @KKRiders | @SunRisers pic.twitter.com/NvGURFEmnz
— IndianPremierLeague (@IPL) May 19, 2024
எலிமினேட்டர்
அதை தொடர்ந்து மே 22ஆம் தேதி நடைபெறும் அகமதாபாத் நகரில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் என தெரிகிறது.
குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி
அதன் மே 24ஆம் தேதி குவாலிஃபயர் 2 போட்டியும், மே 26ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ