ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, செர்ஜ் க்னாப்ரி (Serge Gnabry) என்ற கால்பந்து வீரருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரபல கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச் (Bayern Munich) இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக பிப்ரவரி 12ஆம் தேதியன்று அறிவித்தது.
பேயர்ன் கிளப்பின் மருத்துவ பிரிவு நடத்திய பரிசோதனைகள் செர்ஜ் க்னாப்ரிக்கு காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதாக கிளப் தெரிவித்துள்ளது.
Also Read | இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஃபேஸ்புக் BLOCK செய்த காரணம் என்ன?
"செர்ஜ் க்னாப்ரி இல்லாமல் அணி களம் இறங்க வேண்டியிருக்கும். டைகிரஸ் யுஏஎன்எல் (Tigres UANL) கிளப்புக்கு எதிரான ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியபோது செர்ஜ் க்னாப்ரியின் இடது தொடையில் தசை கிழிந்துவிட்டது. அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதை அணியின் மருத்துவ பிரிவு உறுதி செய்தது" என FC Bayern கிளப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பருவத்தில் இதுவரை 28 போட்டிகளில் விளையாடிய க்னாப்ரி ஆறு கோல்களை அடித்துள்ளார்.
வியாழக்கிழமையன்று நடைபெற்ற ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் FC Bayern கிளப், 1-0 என்ற கோல் கணக்கில் Tigres UANL கிளப்பை வீழ்த்தியது. இதனால் ஒரு வருடத்திற்குள் ஆறாவது பட்டத்தைப் பெற்ற வரலாற்று சாதனையை அணி பதிவு செய்தது. இதற்கு முன்னதாக பார்சிலோனா கால்பந்து கிளப் மட்டுமே 2009ஆம் ஆண்டில் இந்த சாதனையை எட்டிய ஒரே அணியாகும்.
Sixpack @FCBayern pic.twitter.com/Ifz9wwxf5u
— Robert Lewandowski (@lewy_official) February 11, 2021
இறுதிப் போட்டியின் போது, FC Bayern கிளப் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஃப்சைடில் உரிமைக் கோரப்பட்ட ஒரு கோல் நிராகரிக்கப்பட்டது, ஆனால் பெஞ்சமின் பவார்ட் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் போட்டியில் வெற்றி கோலை அடித்தார்.
வரலாற்று வெற்றி சாதனையைப் பற்றி உற்சாகத்தை வெளிப்படுத்திய FC Bayern கிளப்பின் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, ஒரு வருடத்தில் ஆறாவது பட்டத்தை வென்ற தங்கள் கிளப்பிடம் "சிக்ஸ் பேக் (six-pack)" உள்ளது என்று கூறியிருந்தார்.
Also Read | India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR