1 அரையிறுதியில் கூட ஜெயிக்கல... தென்னாப்பிரிக்காவின் பரிதாப நாக் அவுட் வரலாறு - முழு விவரம்

ICC T20 World Cup 2024: ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு அரையிறுதிப் போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வகையில், உலகக் கோப்பை தொடர்களில் அதன் நாக்அவுட் சுற்று வரலாற்றை இங்கு சற்று விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 26, 2024, 10:44 AM IST
  • நாளை காலை 6 மணிக்கு தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் மோதல்.
  • இரு அணிகளும் ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வென்றதில்லை.
  • ஜூன் 29ஆம் தேதி இரவு இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
1 அரையிறுதியில் கூட ஜெயிக்கல... தென்னாப்பிரிக்காவின் பரிதாப நாக் அவுட் வரலாறு - முழு விவரம் title=

ICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதிப் போட்டிகள் நாளை (ஜூன் 27) நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்ற குரூப் சுற்றில், மொத்தம் 4 பிரிவுகளாக தலா 5 அணிகள் பிரிக்கப்பட்டன. 

ஒவ்வொரு அணியும் தனது குரூப்பில் உள்ள மற்ற 4 அணியுடன் தலா 1 போட்டியில் மோதின. இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றன. இதிலும் 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும், இரண்டாவது பிரிவில் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இருந்தன. இதில் முதல் பிரிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இரண்டாவது பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிப் போட்டிகள்

முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் (SA vs AFG Semi Final 1) அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு இந்த போட்டி தொடங்கும். தொடர்ந்து, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து (IND vs ENG Semi Final 2) அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 29ஆம் தேதி இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுவார்கள்.

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் கலக்கிய இந்த 7 பேர்... ஆனால் இந்திய அணியில் இடம் இல்லை!

முன்னாள் சாம்பியன்ஸ் vs புதிய சாம்பியன்ஸ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கெனவே டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய அணிகளாகும். மறுபுறம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை டி20 உலகக் கோப்பை என்றில்லை ஐசிசி கோப்பையே வென்றதில்லை. அந்த வகையில் இம்முறை இறுதிப்போட்டி என்பது முன்னாள் சாம்பியன்ஸ் vs புதிய சாம்பியன்ஸாக இருக்கப்போகிறது.

தென்னாபிரிக்காவின் நாக்அவுட் வரலாறு

இது ஒருபுறம் இருக்க தென்னாப்பிரிக்காவின் (Team South Africa) மிக மிக மோசமான ஒரு வரலாற்றை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது, கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை அரையிறுதியில் வெற்றி பெற்றதே இல்லை. நாக்-அவுட் போட்டிகளில் கண்டிப்பாக தென்னாப்பிரிக்கா நாக்-அவுட் ஆகிவிடும். ஆம், இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் 10 முறை நாக்-அவுட் விளையாடி உள்ள தென்னாப்பிரிக்கா ஒரே ஒருமுறை மட்டும் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றது. 8 போட்டிகளில் தோல்வியும், 1 போட்டியும் டையில் முடிந்தது.

வரலாற்றை மாற்றுமா தென்னாப்பிரிக்கா?

2015ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி காலிறுதியில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குச் சென்றது. ஆனால், அரையிறுதியில் நியூசிலாந்திடம் அடிவாங்கியது. அன்றைய தினம் ஏபி டிவில்லியர்ஸ், மார்னே மார்க்கல் என பலரும் கண்ணீர் வடித்த காட்சிகள் இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வாகும். அந்த அணியில் விளையாடிய டேவிட் மில்லர் மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் மட்டுமே தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நடப்பு உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளையும் விளையாடி தோல்வியையே சந்திக்காத ஒரு அணியாக தென்னாப்பிரிக்கா வலம் வருகிறது. இதன் நாக் அவுட் வரலாற்றை புரட்டி பார்க்கும்போது 10 போட்டிகளில் மூன்று முறை ஆஸ்திரேலியாவிடம்தான் அந்த அணி அடிவாங்கி உள்ளது. இதில் 1999 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி சமனில் முடிந்ததும் அடங்கும். ஆனால் இம்முறை தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை அல்ல ஆப்கானிஸ்தான் அணியையே சந்திக்கிறது. எனவே, வரலாற்றை மாற்றி முதல்முறையாக ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியை எட்டும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா அணியின் ஐசிசி தொடர்கள் நாக்-அவுட் சுற்று போட்டிகளின் வரலாற்று இங்கு பார்ப்போம். 

தென்னாப்பிரிக்காவின் ஓடிஐ உலகக் கோப்ப நாக்அவுட்கள் 

1992 - சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி

1996 - கராச்சியில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகளிடம் தோல்வி

1999 - பர்மிங்காம் நகரில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா உடனான போட்டி சமனில் முடிந்தது. முந்தைய சுற்றின் முடிவின்படி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குச் சென்றது. 

2007 - செயின்ட் லூசியாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி

2011 - மிர்பூரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி

2015 - சிட்னியில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் வெற்றி

2015 - ஆக்லாந்தில் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்திட்ம தோல்வி

2023 - கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி

தென்னாப்பிரிக்காவின் டி20 உலகக் கோப்பை நாக்-அவுட்கள்

2009 - நாட்டிங்காமில் நடைபெற்ற அரையிறுதியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி

2014 - மிர்பூரில் நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வி

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை தோல்வி! ஓய்வை அறிவித்த முக்கிய ஆஸ்திரேலிய வீரர்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News