டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மேட்ச் பிக்சிங் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறியிருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மேட்ச் பிக்சிங் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 20, 2024, 03:46 PM IST
  • பாபர் அசாம் மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு
  • அவருக்கு ஆடி கார் திடீரென எப்படி வந்தது?
  • பாகிஸ்தான் மூத்த பத்திரிக்கையாளர் சரமாரி கேள்வி
டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மேட்ச் பிக்சிங் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு title=

டி20 உலக கோப்பை முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி நடப்பு உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணியிடம் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. அந்த அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இப்படியான தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பிளேயர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்காத பிளேயர்களும் பாபர் அசாமை விமர்சித்து தள்ளுகின்றனர். இந்த சூழலில் தான் பாபர் அசாம் மீது மேட்ச் பிக்சிங் புகார் எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க |  கம்பீர் தலைமை பயிற்சியாளர்... அப்போ இவர்கள் தான் பௌலிங் கோச் - ஐடியா கொடுத்த பாக். வீரர்!

இதனை பாகிஸ்தான் அணியின் மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பின்னணியில் பாபர் அசாமின் மேட்ச் பிக்சிங் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூத்த பத்திரிகையாளர் முபாஷிர் ருக்மான் இது குறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், பாபர் அசாம் ஆடி கார் வைத்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகவும், அதனை பாபர் அசாமுக்கு அவருடைய அண்ணன் பரிசளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த கார் 7 முதல் 8 கோடி ரூபாய் விலை இருக்கும். இவ்வளவு மதிப்பிலான காரை ஒருவர் மற்றொருவருக்கு பரிசாக கொடுக்கிறார் என்றால், அவர் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கும் முபாஷிர் ருக்மான், பாபர் அசாம் அண்ணன் அவ்வளவு பெரிய தொழிலதிபர் எல்லாம் இல்லை, அப்படி இருக்கும்போது இவ்வளவு விலை உயர்ந்த காரை நிச்சயமாக பரிசளித்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதனால் எங்கிருந்து அவ்வளவு விலை மதிப்புள்ள கார் பாபர் அசாம் பெற்றிருக்க வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் முபாஷிர் ருக்மான், அயர்லாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகியோரிடம் எல்லாம் தோற்றால் எல்லாம் கார் வராது, வேறு யாரிடம் தோற்றால் கார் வரும்? என்பது உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை, அதுகுறித்து நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதுதவிர, இன்னும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீது வைக்கப்பட்டு வருகிறது. பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன், இப்படியொரு அணியை நான் பார்த்தது இல்லை, எல்லோரும் அரசியல் செய்து கொண்டு ஒற்றுமை இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க | AFG vs IND: இந்திய அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம்... ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News