இந்தியா - ஆஸ்திரேலியா: இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா போட்ட ஸ்கெட்ச்!

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் சுழலுக்கு ஏற்ப இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 7, 2023, 01:36 PM IST
  • இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி
  • நாளை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது
  • சுழற்பந்துவீச்சுக்கு உகந்தாக இருக்கும்
இந்தியா - ஆஸ்திரேலியா: இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா போட்ட ஸ்கெட்ச்! title=

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு அணிகளும் நாளை தான் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன. 2013 ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வெல்லாத தாகத்தை போக்கும் போக்கும் நோக்கில் ரோகித் படை களம் காண உள்ளது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய அணிக்கு ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். ஆனால், குல்தீப் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே பிளேயிங் லெவனில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளது. 

மேலும் படிக்க | உலக கோப்பை 2023: சச்சின் கணிப்பு! இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்

இதனை கருத்தில் கொண்டு டேவிட் வார்னர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ளூர் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஒருவரை வைத்து பயிற்சி எடுத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் இடது கை சுழற்பந்துவீச்சு எதிர்கொள்வது கடினமானதாக இருக்கிறது. இதனை மனதில் வைத்து தான் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தீவிரமாக பயிற்சி எடுத்திருக்கிறார் வார்னர். அவரைப் போலவே மிட்செல் மார்ஷூம் இடது கை சுழற்பந்துவீச்சாளரைக் கொண்டு பயிற்சி எடுத்திருக்கிறார். 

இவர்களைத் தவிர, கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருடன் ஆடம் ஜம்பா, மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் டி'ஆர்சி ஷார்ட் போன்ற ஆஸ்திரேலிய அணியின் சொந்த சுழற்பந்து வீச்சாளர்களையும் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச செய்து தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சில பந்துகளை ஷாட் ஆடி பார்த்தாலும், முக்கியமாக ஸ்டிரைக், டிரைவ்கள் மற்றும் மிட்-விக்கெட் நோக்கி ஃபிளிக் செய்வதிலும் கவனம் செலுத்தினர். டேவிட் வார்னர் தீவிரமாக பயிற்சி செய்து, உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள முழு மூச்சுடன் தயாராக இருக்கிறார். 

மேலும் படிக்க | ODI உலகக் கோப்பை 2023: அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News