WTC தொடர் புள்ளி பட்டியலில் இந்தியாவை நெருங்கும் ஆஸ்திரேலியா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் ஆஸ்திரேலியா முழு 120 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Last Updated : Jan 6, 2020, 04:28 PM IST
WTC தொடர் புள்ளி பட்டியலில் இந்தியாவை நெருங்கும் ஆஸ்திரேலியா! title=

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் ஆஸ்திரேலியா முழு 120 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரன  மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட்வாஷ் செய்த நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாம் இடம் பிடித்ததோடு, இந்தியாவிற்கு மிக நெருக்கமான புள்ளிகளை பெற்றுள்ளது.

3-0 தொடர் வெற்றியை முடித்த ஆஸ்திரேலியா இப்போது 296 புள்ளிகளில் நிற்கிறது. அதாவது, மூன்று தொடர்களில் தொடர் வெற்றி பெற்று (2019-ஆம் ஆண்டில், மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று முதலிடத்தைப் பிடித்தது.) 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியாவை விட 66 புள்ளிகள் பின்தங்கி உள்ளது. 

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட சொந்த நாட்டு தொடரில் வெற்றி பெற்று முழு புள்ளிகளாக 120 புள்ளிகளைப் பெற்றது மற்றும் இங்கிலாந்துடன் 2-2 என்ற கணக்கில் 56 புள்ளிகளை பெற்றது.

முன்னதாக இலங்கையுடன் 1-1 என்ற கோல் கணக்கில் தொடரை சமன் செய்த நியூசிலாந்து இரண்டு தொடர்களுக்குப் பிறகு 60 புள்ளிகளில் உள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் தலா 80 புள்ளிகளுடன் சற்று முன்னிலை பெற்றுள்ளன.

இங்கே ஒரு முழு அட்டவணை:

 

அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள்
 
இந்தியா 7 7 0 360
ஆஸ்திரேலியா 10 7 2 296
பாகிஸ்தான் 4 1 2 80
இலங்கை 4 1 2 80
நியூசிலாந்து 5 1 4 60
இங்கிலாந்து  6 2 3 56
தென்னாப்பிரிக்கா 4 1 3 30
மேற்கிந்திய தீவுகள் 2 0 2 0
வங்கதேசம் 2 0 2 0

(புள்ளி கணக்கீடு - ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் என்ற கணக்கில் போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் 60 புள்ளிகள் சேர்க்கப்படும். 5 போட்டிகள் கொண்ட தொடரின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் 24 புள்ளிகள் சேர்க்கப்படும்)

புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை அணிகள்  80 புள்ளிகளுடன் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தினை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். 60 புள்ளிகளுடன் நியூசிலாந்த அணி 5-வது இடத்திலும், இங்கிலாந்து 56 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி 30 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது. இவர்களை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகள் 0 புள்ளிகளுடன் தங்களது கணக்கினை துவங்காமலேயே உள்ளனர்.

Trending News