தங்கம் வென்ற ஹாக்கி அணி! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி! 100-ஐ நெருங்கும் இந்தியா

Asian Games 2023 Gold Medal: ஆசியப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. ஜப்பானை 5-1 என்ற கணக்கில் தோற்கடித்தது மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. மொத்த பதக்க எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 6, 2023, 06:49 PM IST
தங்கம் வென்ற ஹாக்கி அணி! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி! 100-ஐ நெருங்கும் இந்தியா title=

Asian Games 2023 Medal Tally: ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 13வது நாளில் ஹாக்கியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்தியா சார்பில் மன்பிரீத் சிங் 25வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 32 மற்றும் 59வது நிமிடத்திலும், அமித் ரோஹிதாஸ் 36வது நிமிடத்திலும், அபிஷேக் 48வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 51வது நிமிடத்தில் ஜப்பானை சேர்ந்த தனகா அந்த அணிக்காக ஒரே கோலை அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மறுபுறம், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஜப்பானின் யமகுச்சிக்கு எதிரான ஆட்டத்தில் 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மல்யுத்தத்தில், பெண்களுக்கான 62 கிலோ எடைப் பிரிவைத் தொடர்ந்து, 76 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் இந்தியாவுக்கும் வெண்கலம் கிடைத்தது. இந்தியாவின் கிரண் மங்கோலியாவின் கன்பத் அரியுஞ்சர்கலை தோற்கடித்து வெண்கலம் வென்றார். மறுபுறம், ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ பிரிவில் இந்தியாவின் அமான் வெண்கலம் வென்றார். அதே சமயம் பிரிட்ஜ் இறுதிப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. 

இந்திய ஆண்கள் அணி வில்வித்தையின் ரிகர்வ் குழு இறுதிப் போட்டியில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்து வெள்ளியுடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. அதே நேரத்தில் 62 கிலோ எடைப் பிரிவில் 21 வயதான சோனம் மாலிக் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஜியா லாங்கை தோற்கடித்தார். இந்திய மகளிர் அணி அரையிறுதியில் தாய்லாந்திடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. வில்வித்தை ரீகர்வ் மகளிர் அணிக்குப் பிறகு, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று, இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றுள்ளது. மொத்த பதக்க எண்ணிக்கை 95ஐ எட்டியுள்ளது.

மேலும் படிக்க - ஐசிசி உலகக் கோப்பை 2023: டிக்கெட்டுகளை BookMyShow-ல் புக் செய்வது எப்படி?

இந்தியா 100 பதக்கங்கள் வெல்வது உறுதி

ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100 பதக்கங்களைத் தொடத் தயாராக உள்ளது. இன்று 9 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இன்று இந்தியா 4 விளையாட்டுகளில் 7 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. இதன்படி இந்தியா 100 பதக்கங்களை வெல்லும் நிலையை எட்டியுள்ளது.

இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை

வரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 182 103 57 342
2 ஜப்பான் 44 55 60 159
3 தென் கொரியா 34 47 81 162
4 இந்தியா 22 34 39 95
5 உஸ்பெகிஸ்தா 19 17 25 61

மேலும் படிக்க - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!

இந்த ஆட்டங்களில் இந்தியாவுக்கு பதக்கம் நிச்சயம் கிடைக்கும்

கிரிக்கெட் போட்டியில் 1 பதக்கம் உறுதி
வென்ற இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிரிக்கெட்டில் ஒரு பதக்கம் வருவது உறுதி.

கபடி போட்டியில் 2 பதக்கங்கள் உறுதி
கபடியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன. அங்கிருந்து இரண்டு பதக்கங்கள் நிச்சயம்.

வில்வித்தை போட்டியில்  3 பதக்கங்கள் உறுதி
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், இரு வீரர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், எனவே தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் இந்தியாவுக்கு வரும். கூட்டு மகளிர் தனிநபர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா போட்டியிடுகிறார். இங்கும் இந்தியாவுக்கு பதக்கம் நிச்சயம்.

பேட்மிண்டன் போட்டியில் 1 பதக்கம் உறுதி
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி மலேசிய அணியை எதிர்கொள்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற இந்தியா

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்றது  தான் அதிகமான எண்ணிக்கையாக இருந்தது. இந்தமுறை அனைத்து சாதனைகளையும் முறியடித்து இந்தியா அதிக பதக்கங்களை குவித்து வருகிறது.

மேலும் படிக்க - Asian Games 2023: வரலாறு படைத்த இந்தியா! இதுவரை இல்லாத அளவுக்கு பதக்க எண்ணிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News