இன்றைய போட்டியில்; ஆண்ட்ரே ரசலின் ரன் மழை தொடருமா?

IPL 2019 தொடரின் 38-வது லீக் ஆட்டம் இன்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெறுகிறது!

Last Updated : Apr 21, 2019, 03:35 PM IST
இன்றைய போட்டியில்; ஆண்ட்ரே ரசலின் ரன் மழை தொடருமா? title=

03:35 PM 21-04-2019
டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!


IPL 2019 தொடரின் 38-வது லீக் ஆட்டம் இன்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெறுகிறது!

IPL 2019 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 5 மற்றும் 6-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பெறும்.

கடந்த இரு தினங்களா பிற்பகலில் மழை எட்டி பார்த்து செல்லும் ஐதராபாத் மைதானத்தில் இன்று போட்டி நடைபெறுவதால், போட்டியின் போக்கை மழை மாற்றியமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பொருத்தவரையில்., சென்னை அணியை எதிர்கொண்ட வெற்றி அணியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கொல்கத்தா அணியில் ஆண்டிரிவ் ரூஸ்வெல் மற்றும் நித்திஷ் ராணாவின் தேவை அதிகரித்துள்ளதால் அணியின் பார்வை ராபின் உத்தப்பாவின் பக்கம் திரும்பியுள்ளது.

வேகப்ந்து வீச்சாளர்கள் ஹாரி குர்ணி மற்றும் பிரசித் கிருஷ்ணா இன்றைய போட்டியில் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் 180 ரன்களை தாண்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இன்றைய போட்டியில் மீண்டும் ரன் மழை பொழியுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Trending News