தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!

November 2023 Plant Transits: சுக்கிரனின் பெயர்ச்சி மற்றும் சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2023, 11:57 PM IST
  • நவம்பரில் 4 ராசிகளுக்கு அருள் மழை பொழியும் சனீஸ்வரர்
  • சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை?
  • லட்சுமியின் அருளாசி பெறும் ராசிகள்
தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்! title=

Grah Gochar November 2023: இந்த ஆண்டு நவம்பர் மாதம் மதம் மற்றும் ஜோதிடத்தின் பார்வையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீபாவளி பண்டிகை நவம்பரில் கொண்டாடப்படும் என்ற நிலையில், சில கிரகங்களின் மாற்றாமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதில் இரு கிரகங்களின் மாற்றங்களினால் 4 ராசிகளுக்கு பண வரத்து அதிகரிக்கும். அவர்களின் கஜானாவை சுக்கிரனும் சனியும் நிரப்புவார்கள். பஞ்சாங்களின் கணிப்பின் படி, நவம்பர் மாதம் மிகவும் மங்களகரமான கிரகத்தின் பெயர்ச்சியுடன் தொடங்குகிறது.

முதலாவதாக, நவம்பர் 3 ஆம் தேதி, சுக்கிரன், சிம்ம ராசியில் இருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைவார். அடுத்த நாள், 4 நவம்பர் 2023 அன்று, சனி பகவான் தனது நிலையை மாற்றுகிறார். அவர் தற்போது, தனது சொந்த ராசியான கும்பத்தில் பிற்போக்கு நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். நவம்பர் 4 முதல் நேர் திசையில் பயணத்தை தொடங்கவிருக்கும் சனி பகவான், பலருக்கும் நன்மையான பலன்களையே வழங்குவார்.

சுக்கிரனின் சஞ்சாரமும், சனியின் சஞ்சார மாற்றமும் ராசிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவம்பர் 12ம் தேதி தீபாவளிக்கு முன் இந்த மாற்றங்கள் நடக்கும். எனவே, லட்சுமி தேவி, நான்கு ராசிக்காரர்களிடம் இரக்கம் காட்டி, தீபாவளிக்கு முன்பே செல்வத்தை அள்ளித் தருவாள். நவம்பரில் நடைபெறவிருக்கும் கிரகப் பெயர்ச்சிகளினால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

4 ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டமானது
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அருமையாக இருக்கும். மன அமைதி பெறும் மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். சனி மற்றும் சுக்கிரனின் கிரகப் பெயர்ச்சிகளின் தாக்கத்தால், மேஷ ராசியினரின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்: நவம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கப் போகிறது. இதுவரை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான காலகட்டம் இது.பண வரத்து அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

மிதுனம்: சனி மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சியால், மிதுன ராசியினருக்கு ஒரு அற்புதமான நேரத்தைக் குறிக்கும். வெற்றி பெற கொஞ்சம் கடின உழைப்ப்பும் தேவைப்படும். ஆனால், எதிர்பாராத பண ஆதாயம் வந்து சேரும். வராக்கடன் என்று நினைத்த பணம் வந்து சேர்வதால் உங்கள் நிதி நிலை மேம்படும். சட்ட தகராறுகளில் சிக்கியிருந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக முடியும்.  

மகரம்: சனி சுக்கிரன் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்களைத் தரும். சனியின் தாக்கத்தால் எதிர்பாராத பண பலன்கள் வந்து சேரும். இது பணம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். மூதாதையர் சொத்துக்களிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மொத்தத்தில் நிம்மதியான மாதம் இது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பிறகு கும்ப ராசியில் சனி உச்சம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News