வார ராசிபலன்: கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கமும் மாற்றமும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் ஏற்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால், எதிர் வரும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
டிசம்பர் மாதத்தில் பல கிரகங்கள் ராசி மாற உள்ளன. அவையும் பலரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் பார்க்கும்போதும், இந்த வார கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் சொல்லும் இந்த ராசிபலன் மிகவும் முக்கியம் வாய்ந்தது. வரும் வாரத்திற்கான ராசிபலன்களில் துலாம் முதல் மீனம்வரையிலான ஆறு ராசிகளுக்கான பலன்கள் இவை...
மேலும் படிக்க | Weekly Horoscope: யாருக்கு இந்த வாரம் என்ன நடக்கும்? ராசியான ராசிபலன்
துலாம்: வேலையில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஒரு நண்பர் அல்லது சக ஊழியர் மீது ஈர்ப்பு உணர்வு உருவாகலாம், பொதுவாக காதலுக்கு உகந்த வாரம். பண வரவும் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்: உங்களை யாராவது ஏமாற்றலாம், எனவே யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். பதற்றம் ஏற்படும் வாய்ப்பு தென்படுகிறது. வேலையை விரைந்து முடிக்க முயற்சிப்பீர்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். நிதானமாக நடந்துக் கொள்வது நல்லது.
தனுசு: நீங்கள் தனியாக நேரத்தை செலவிட விரும்பும் காலம் இது. சுற்றுலா செல்லலாம். இயற்கையின் நடுவே நேரம் செலவிடுவது நிம்மதி தரும். உத்தியோகத்தில் பெரிய வாய்ப்புகள் அமையும். தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மகரம்: நேரம் நன்றாக இருக்கும். எங்கு வேண்டுமானாலும் வெளியே செல்லலாம். நல்ல உணவை ருசிக்கும் வாய்ப்புகள் அமையும். இதுவரை இருந்த கவலைகள் இப்போது விலகும். வாழ்க்கை மிகவும் ஒழுங்காக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் மன அழுத்தத்தைத் தாங்கிக் கொள்வார்கள். காலத்துடன் சேர்ந்து நகர்வது அவசியம் என்பதை புரிந்துக் கொள்ளும் நேரம் இது. இந்த நேரத்தை பொறுமையாக கடந்து செல்லுங்கள். தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கலாம்.
மீனம்: செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இருப்பினும், வாழ்க்கையில் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களும் இருக்கும். மன அமைதியை உணர்வீர்கள். தொழில் வாழ்க்கையில் விஷயங்கள் மெதுவாக நகரும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ