Weekly Horoscope: வார ராசி பலன்கள்! மேஷம் தொடங்கி 6 ராசிகளுக்கான பலன்

Weekly Horoscope 10 October to 16 October 2022: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கான அக்டோபர் 10 முதல் 16 வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2022, 01:08 PM IST
  • சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்
  • கன்னி ராசியினரின் பணிச்சுமை அதிகரிக்கும்
  • மேஷ ராசிக்காரர்களுக்கு மோசமான வாரம் இல்லை
Weekly Horoscope: வார ராசி பலன்கள்! மேஷம் தொடங்கி 6 ராசிகளுக்கான பலன் title=

Weekly Horoscope 10 October to 16 October 2022: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கான அக்டோபர் 10 முதல் 16 வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். புரட்டாசி மாதத்தின் கடைசி வாரமான இது அனைவருக்கும் முக்கியமானது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாக வரும் வாரத்தின் பலன்கள் இவை.

மேஷம் - மிகவும் சிறப்பான இந்த வாரம், பண வரவால் மகிழ்ச்சியைக் கொடுக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சுப செலவுகளாக இருக்கும் என்பதால் நிம்மதியாக செலவளியுங்கள். வேலை இடத்தில் மரியாதை கிடைக்கும், ஆனால் பணிச்சுமை குடும். காதல் துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வரவு செலவை அதிகரிக்கும். தேவையில்லாத பேச்சை தவிர்ப்பது நல்லது.  

மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

ரிஷபம் - பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாரம் இது. வேலை தொடர்பான பயணமாக இருந்தாலும் சரி, ஜாலியான பயணமாக இருந்தாலும் சரி, உங்கள் எண்ணங்கள் ஈடேறும். அதிக பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.  

மிதுனம் ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் மனம் செல்லும் வாரமாக இது இருக்கும். பண்டிகை நாட்களில் செலவு செய்ய தயங்கவேண்டாம். ஏனெனில் இந்த வார ராசிபலனின்படி, உங்களுக்கு இது செலவுக்கான காலமாக இருக்கிறது.

கடகம் - சற்று கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. நோயாளிகளுக்கு அதிக கவனம் தேவை. வார்த்தைகளால் காயப்படுத்துபவர்களிடம் இருந்து விலகி இருந்தால், மனதில் வருத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.  

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆதாயமான வாரம் இது. பிறரிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். பிறரின் தலையீட்டை நீங்கள் விரும்பாவிட்டாலும், மற்றவர்கள் அதை கண்டு கொள்ளமாட்டார்கள் என்பதால் மனதில் வருத்தமும் ஏற்படும்.  

கன்னி - பணம் தண்ணீராக செலவாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், பணத் தேவை அதிகரிக்கும். வேலையை மாற்ற விரும்புபவர்களுக்கு சாதகமான வாரம் இது. பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News