நாயிடம் பம்மிய புலி.. நம்ப முடியாத சண்டை: ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ், வைரல் விடியோ

Funny Animal Video: ஒரு வீனோதமான மோதலை காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 7, 2023, 10:34 AM IST
  • அச்சமற்ற நாயின் துணிச்சலைக் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
  • இந்த அதிசய வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @wildanimalshorts2.0 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
நாயிடம் பம்மிய புலி.. நம்ப முடியாத சண்டை: ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ், வைரல் விடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் குறிப்பாக புலி, சிங்கம், குரங்கு, பாம்பு, நாய், பூனை ஆகிய விலங்குகளுக்கு மவுசு அதிகம். புலி காட்டின் மிகவும் சக்திவாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். சிங்கங்கள் கூட புலிகளுக்கு முன்னால் சற்று அடங்கித்தான் இருக்கின்றன. புலியை கண்டால் பலசாலிகளாக யானைகளின் கூட்டமும் தங்கள் பாதையை மாற்றிக்கொள்ளும். அப்படி இருக்கையில் பெரும்பாலும் காடுகளில் வசிக்காமல் மனிதர்கள் வாழும் பகுதிகளில் வசிக்கும் நாய்களால் புலியை எதிர்கொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும்.

ஆனால் அப்படி ஒரு வீனோதமான மோதலை காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. இதில் காணப்படும் நாயின் தைரியம் நமது கற்பனைக்கு அப்பால் உள்ளது. இந்த நாயின் உறுதிக்கு முன்னால் புலியும் சற்று அடங்கித்தான் போனது. புலி நாயின் முன் பணிந்து ஓரமாகச் சென்றது. இந்த நாயின் துணிச்சலான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில் ஒரு கூண்டு போல் காணப்படும் இடத்தில் ஒரு புலியும் நாயும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. இரு விலங்குகளுக்கும் இடையில் மிகவும் ஆக்ரோஷமான சண்டை நடக்கிறது. சில இடங்களில் நாயின் ஆதிக்கமும் சில இடங்களில் புலியின் ஆதிக்கமும் அதிகமாகின்றன. ஆனால், இறுதியில் நாயே புலியின் மீது அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது. நாயின் ஆக்ரோஷமும், உறுதியும் நம்மை போல புலியையும் வியக்க வைக்கின்றது. நாயில் தளராத உறுதிக்கு முன்னால் புலியும் பின்வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | ’சும்மா இருந்தவனை சொறிஞ்சா இப்படி தான்’ குசும்பு செய்து வாங்கிகட்டிக்கொண்ட குரங்கு - வைரல் வீடியோ

புலிக்கு முன்னால் மாஸ் காட்டிய நாயின் வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

அச்சமற்ற நாயின் துணிச்சலைக் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த அதிசய வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @wildanimalshorts2.0 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

இது வளர்ப்பு புலியா?

இந்த புலி ஒரு செல்லப் பிராணி போல் தெரிகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நாயைத் தாக்குவதற்கு புலி முயற்சிப்பது போலவே தெரியவில்லை. இரண்டு விலங்குகளும் விளையாடிக்கொண்டு இருப்பது போல தெரிகின்றது. பல இடங்களில் புலிகளை வளர்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் புலிகளை வளர்க்கின்றனர். அண்டை நாடான பாகிஸ்தானில் கூட, மக்கள் புலிகளை வீட்டில் வைத்து வளர்க்கிறார்கள். அப்படி வீடுகளில் வளர்க்கப்படும் புலிகள் செல்லப்பிராணிகளைப் போல நடந்துகொள்கின்றன என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஆகாசத்தில் பறந்த பறவையை அந்தரத்தில் பறந்து பிடித்த கருப்பு பூனை; வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News