வரவிருக்கும் திரிகிரஹி யோகத்தால் மகிழ்ச்சியடையும் ராசிக்காரர்களில் நீங்கள் ஒருவரா?

Tirgrahi Yog in March 2024: வேத ஜோதிடத்தின்படி, தற்போது மீன ராசியில் அபூர்வமான திரிகிரஹி யோகம் உருவாகப் போகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகுது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 6, 2024, 08:32 AM IST
  • சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி யோகம்
  • மூன்று கிரகங்களின் முக்கூட்டு
  • 3 ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள்
வரவிருக்கும் திரிகிரஹி யோகத்தால் மகிழ்ச்சியடையும் ராசிக்காரர்களில் நீங்கள் ஒருவரா? title=

திரிகிரஹி யோகம்: நவகிரகங்கள் இயங்கும்போது, அவை இருக்கும் இடங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு கிரகம் இருக்கும் வீட்டிற்கு ஏற்றவாறு ராசிகளின் பலாபலன்கள் மாறுபடும். ராசிகளிலும் நட்சத்திரங்களிலும் சஞ்சரிக்கும்போது, ஒரு கிரகம் கொடுக்கும் நன்மை தீமைகளும் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள், அனைத்து ராசிகளுக்கும் ஒட்டுமொத்தமாக நல்லது என்றோ தீமை செய்யும் என்றோ சொல்லிவிட முடியாது.

கிரகங்களின் மாற்றங்கள் நமது வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். தற்போது சில கிரகங்கள் ஒரே வீட்டிற்கு வரும்போது திரிகிரஹி மற்றும் யோகம் உருவாகிறது. இந்த மூன்று கிரகங்களும் சுப கிரகங்கள் என்பதால், இது யோகம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே அசுப கிரகங்கள் ஒன்றிணைந்தால், அது தோஷம் என்று அழைக்கப்படும்.

இந்த யோகங்களும், தோஷங்களும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான மற்றும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மார்ச் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஒரே ராசியில் வரும்போது திரிகிரஹி யோகம் உருவாகிறது. இந்த யோகம், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என்றால், சிலருக்கு நல்வாய்ப்புகளை அளவாக வழங்கும்.  

மார்ச் மாத திரிகிரஹி யோகத்தால் மகிழ்ச்சியடையும் ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி உச்சம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம்

ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அருமையான காலம் இது. வாய்ப்புகளை அள்ளித் தரும் இந்த திரிகிரஹி யோகமானது, சாதகமான பலன்களைத் தரும். போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்களுக்கு  வெற்றி கிடைக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலதிபர்கள், கடை வைத்திருப்பவர்களுக்கு வியாபாரம் விருத்தியாகும்.  

துலாம் (Libra Zodiac Sign)
திரிகிரஹி யோகத்தின் நற்பலன்களை துலாம் ராசியினர் அனுபவிக்கலாம். முதலில் மனதில் நிம்மதி வரும். தற்போது ​​துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வாகனங்கள் மற்றும் சொத்துக்களை வாங்கும் யோகம் வரும். பரம்பரை சொத்து பிரச்சனைகள் தீர்ந்து, நிம்மதி பிறக்கும். பரம்பரை சொத்து வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். பணியிடத்தில் புதிய முயற்சிகள், தொழில்முறை முயற்சிகளில் நேர்மறையான விளைவுகள் ஏற்படும். துலாம் ராசியினரின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மேம்படும்.

மகரம் (Capricorn Zodiac Sign)
மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம்  மங்களகரமான பலன்களைக் கொடுக்கும். செல்வத்தில் கணிசமான அதிகரிப்பை அனுபவிக்கலாம். நிதி ஸ்திரத்தன்மை வலுவடையும் என்பதற்கு காரணம், வருமானம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு திடீர் சலுகை அல்லது சம்பளத்தில் ஏற்றம் ஏற்படலாம். வருமான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கும். இது மனதில் மகிழ்ச்சியை அதிகரித்து, அதிகம் சேமிக்கத் தூண்டும். அதிகரிக்கும் செல்வாக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும்.

திரிகிரஹி யோகத்தால், ​​இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசும் என்றாலும், அவரவர் ஜாதகத்தின்படி பலன்கள் மாறுபடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கல். ஒரு சிலருக்கு, இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதை விட மிக அதிக நன்மைகள் இருக்கலாம் என்றால், சிலருக்கு பலன்கள் குறைந்து இருக்கலாம். ஆனால், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு முன்பு இருந்ததை விட அதிக நிம்மதியை தரும் என்பதில் மாற்றமில்லை.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News