சதூர்த்தி நாளில் சந்திரனை பார்க்கக்கூடாது.. விநாயகரின் கோபத்துக்கு ஆளாகிவிடுவீர்கள்

விநாயகர் சதூர்த்தி விழா இந்தியா முழுவதும் கோலாகலகமாக கொண்டாடப்படும் நிலையில், சதூர்த்தி நாளில் சந்திரனை பார்த்தால் கேடு விளையும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. அதற்கான முழு பின்னணியையும் இங்கே தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 18, 2023, 11:47 AM IST
  • விநாயகர் சதூர்த்தி பலன்கள்
  • சந்திரனை பார்த்தால் கேடு வரும்
  • சந்திரனுக்கு சாபம் விட்ட விநாயகர்
சதூர்த்தி நாளில் சந்திரனை பார்க்கக்கூடாது.. விநாயகரின் கோபத்துக்கு ஆளாகிவிடுவீர்கள் title=

விநாயகருக்கு பிள்ளையார், கணபதி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. யானை முகத்தானை நினைத்து வழிப்பட்டால் எந்தவொரு காரியத்துக்கும் வரும் தடைகள் விலகி ஓடும் என்பதை ஐதீகம். அதனால் தான் எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட விநாயகர் சந்திரனுக்கு சாபம் விட்ட கதை தெரியுமா?. அவர் ஏன் சாபம் விட்டார்? சதூர்த்திநாளில் ஏன் நிலவை பார்க்கக்கூடாது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்! ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

விநாயக பெருமானுக்கு எப்போதும் படையிட்டு பூஜை செய்வது வழக்கம். ஏனென்றால் அவருக்கு சாப்பாடு மீது அவ்வளவு பிரியம். வகைவகையாக எத்தனை பண்டங்கள் நீங்கள் படையிலிட்டாலும் அவையனைத்தையும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். அப்படியொரு நாள் பக்தர் ஒருவர் விநயாக பெருமானை வீட்டிற்கு அழைத்து விதவிதமான பண்டங்களை அவருக்கு படைத்தார். அளவுக்கதிகமாக பண்டங்கள் இருந்ததால் பிள்ளையாரும் வயிறு முட்ட சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்துக்கும் மேல் அவரால் சாப்பிட முடியவில்லை. அவற்றை விட்டுச் செல்லவும் மனமில்லாத பிள்ளையார், கூடவே வீட்டிற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார். 

சாப்பிட்ட மயக்கத்தில் செல்லும்போது ஒரு இடத்தில் பிள்ளையார் தடுமாறி விழ, கொண்டுவந்த பண்ட பதார்த்தங்கள் எல்லாம் திசைக்கு ஒன்றாக சிதறிவிட்டன. உடனே பிள்ளையார் யாராவது பார்க்கிறார்களா? என சுற்று முற்றும் பார்த்துவிட்டு கீழே இருந்த பதார்த்தங்களையெல்லாம் மீண்டும் பொறுக்கி எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். அப்போது, வானில் இருந்து சந்திரன் அவரைப் பார்த்து கேலியாக சிரிப்பதை விநாயகர் பார்த்துள்ளார். சந்திரனை நோக்கி, எதற்காக இப்படி ஏளமான சிரித்துக் கொண்டிருக்கிறார் என கேட்க, நக்கலாக சந்திரன் சிரித்துக் கொண்டே உன் தொந்தியையும், யானை முகத்தையும் பார்க்கும்போது என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

கணபதிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. உடனே சந்திரனை நோக்கி நீ என்னை ஏளனம் செய்ததற்கு வானில் தோன்றாமல் மறைந்து போவாய் என கடும் சாபம் விட்டுவிட்டார். பிள்ளையாரின் சாபத்தால் வானம் இருண்டு காணப்பட்டது. சந்திரனும் தன் தவறை உணர்ந்து மீண்டும் விநாயக பெருமானை வந்து சந்தித்து மன்னிப்பு கோரினார். இருந்தாலும் விநாயகருக்கு கோபம் தணியவில்லை. உன் அழகால் தானே என்னை கேலி செய்தாய், அதனால் மாதம் ஒருமுறை மட்டும் நீ உன் முழு உருவத்தை பெறுவாய், அதன்பிறகு படிப்படியாக தேய்ந்து ஒருநாள் முழு உருவமற்று இருப்பாய், அதன்பின் படிப்படியாய் வளர்ந்து வளர்பிறை நாளில் ஒருநாள் முழு உருவத்துடன் இருப்பாய் என சாபம் இட்டுவிட்டார்.  

மேலும் சதுர்த்தி நாளில் என்னை அவமதித்த உன்னை பார்க்கும் அனைவருக்கும் நீ கேடுகளையே விளைவிப்பாய் என்றும் கூறிவிட்டார். அதன்படியே வளர்பிறை சதூர்த்தி நாளில்தான் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது. அதாவது நான்காம் பிறை நாளான சதூர்த்தி நாளில் யாராவது நிலாவை பார்த்தால் நிச்சயம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அழகில் ஆடிய சந்திரனுக்கு விநாயகர் இப்படி பாடம் கற்பித்துள்ளார். 

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி கொண்டாட இத்தனை நிபந்தனைகளா? காவல் துறையின் பாதுகாப்பு வழிமுறைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News