சனீஸ்வரனின் அருளால்... இந்த ராசிகளுக்கு புகழும் பணமும் தேடி வரும்

Saturn Venus conjunction: மார்ச் மாதம் முதல் வாரத்தில், சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்ல இருக்கிறார். சனீஸ்வர பகவான் ஏற்கனவே கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2024, 09:48 PM IST
  • சனி சுக்கிரன் இணைவு, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், வெற்றிகளையும் கொடுக்கும்.
  • முயற்சிக்கு உண்டான தனவரவு கிடைக்கும்.
  • பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும்.
சனீஸ்வரனின் அருளால்... இந்த ராசிகளுக்கு புகழும் பணமும் தேடி வரும் title=

சனி சுக்கிரன் யுதி பலன்கள்: மார்ச் மாதம் முதல் வாரத்தில், சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்ல இருக்கிறார். சனீஸ்வர பகவான் ஏற்கனவே கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானும், சுக்கிரனும் நட்பு கொண்ட கிரகங்களாக கருதப்படுகின்றன. எனவே, சனி சுக்கிரன் இணைவு, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், வெற்றிகளையும், பண பலத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சனிபகவான் சுக்ரன் இணைவினால் ரிஷப ராசிக்கான பலன்கள்

ரிஷப ராசியினர் தொழிலில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். வாழ்வில், சுகங்கள் அனைத்தையும் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு, வேலை வாய்ப்புகள் தேடி வரும். நிதிநிலை வலுவாக இருக்கும். இதனால் வரை கைக்கு வராத பணம், கிடைக்கும். நிதி பற்றாக்குறை காரணமாக தடைபட்ட வேலைகள், மீண்டும் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். முயற்சிக்கு உண்டான தனவரவு கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். 

சனிபகவான் சுக்கிரன் இணைவதால் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள்

கடக ராசியினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும். வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும். 

மேலும் படிக்க | குரோதி ஆண்டில் ராகு கேது சஞ்சாரத்தால் யாருக்கு என்ன நன்மை? படுத்தி எடுப்பாரா கேது?

சனிபகவான் சுக்கிரன் இணைவதால் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள்

துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதி. இந்நிலையில் சுக்கிரன் சனி பகவானுடன் இணைவது, தொழில் வாழ்க்கையில் பல அற்புதமான வாய்ப்புகள் திருப்பங்கள் ஏற்படும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்பு அதிகம் உண்டு. சொத்து அல்லது வீடு வாங்கலாம். புதிய வாகன யோகமும் உண்டு. பரம்பரை சொத்து கைக்கு வரும் வாய்ப்பு உண்டு. பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். 

சனி பகவான் சுக்கிரன் இணைவதால் மகர ராசிக்கு கிடைக்கும் பலன்கள்

மகர ராசிக்கான அதிபதி சனீஸ்வரன். இந்நிலையில் சனீஸ்வரன் சுக்கிரனுடன் சேருவதால், தொழிலில் சிறந்த வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமையான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். 

சனிபகவான் சுக்கிரன் இணைவதால் கும்ப ராசிக்கு கிடைக்கும் பலன்கள்

சனி பகவான் சுக்கிரன் இணைவதால், கும்ப ராசியினர் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாள் வாட்டி வந்த பிரச்சனைகள் தீர்ந்து, வேலையில் மேலதிகாரியுடன் நல்ல உறவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். மன அமைதிக்கும், சந்தோஷத்திற்கும் குறைவே இருக்காது. உத்தியோகத்தில் ஆதரவான சூழல் உண்டாகும்.  வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு சாதகமாகும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மார்ச் மாத சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்... பண வரவு அதிகமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News