தமிழ்நாட்டில் பக்தி சிரத்தையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் விநாயக சதுர்த்தி திருவிழா, பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதுடன் முடிவுக்கு வரும். மாநிலம் முழுவதும் விநாயகரை கொண்டாடி வரும் மக்கள் தங்கள் வழக்கப்படி பூஜைகள் செய்தும், கோவிலுக்கு சென்றும் கணபதியை வழிபட்டு வருகின்றனர். சென்னையின் 40 அடி உயர விநாயகர் சிலை தனித்துவமான பொருட்களால் வடிவமைக்கப்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சென்னையில் 40 அடி விநாயகர் சிலை
வித்தியாசமான பொருட்களால் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமிக்க வைக்கும் விநாயகரின் சிலைப் படைப்பு, கலைகளை போற்றும் கலைஞர்களின் திறமையையும், ஆக்கத்திறனையும் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலை நிறுவப்பட்டது.
சென்னையில் கணபதிக்கு 40 அடி உயர சிலை நிறுவப்பட்டு, அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 6,000 பித்தளை தாம்பூலம், தகடுகள், 1,500 காமாக்ஷி விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தியை கலைத்திறனால் வெளிப்படுத்தும் கலைஞர்களின் அர்ப்பணிப்பை காட்டும் கலைப்படைப்புகள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | வீட்டுக்கு வந்த விநாயகரை வழியனுப்புவது ஏன்? விநாயகரை விசர்ஜனம் செய்வது நல்லதா?
நுணுக்கமான கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கணபதி சிலை, பக்தர்களின் மைய ஈர்ப்பாக மாறியுள்ளது. சிலையின் மூக்கு பகுதியில் 1,500 காமாக்ஷி விளக்குகளும், காதுகளில் 350 கடல் ஓடுகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தால், கொளத்தூர் பகுதி விநாயகரை அடுத்து சென்னை சிஐடி நகரில் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்ட பாதுஷா விநாயகர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். பாதுஷா இனிப்பு செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, இந்த ஆண்டு கணபதி சிலைகளின் ‘பாதுஷா’வாக இருக்கிறார்.
வித்தியாசமாய் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கற்பூர தீபாரதனை காட்டப்பட்டபோது, ஜெகஜ்ஜோதியாய் விநாயகர் ஜொலித்தார். இந்த ஆண்டு பாதுஷா விநாயகர் என்றால், கடந்த வருடம் இந்தப் பகுதியில் செய்யப்பட்ட சிலை, ‘மைசூர் பாகு’ இனிப்பால் செய்யப்பட்டதாக இருந்தது.
மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார விநாயகர் : அம்பானி குடும்பம் கொடுத்த 20 கிலோ தங்கம் கிரீடம்
’பாதுஷா கணபதி’ சிலை 250 கிலோ உணவுப்பொருட்களால் உருவாக்கப்பட்டது. சர்க்கரை, மைதா, முந்திரி, திராட்சை, நிலக்கடலை, பொட்டுக்கடலை, இனிப்பு பாகு, செரி பழம் என 250 கிலோவில் செய்யப்பட்ட விநாயகர் சிலை 9 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பீடத்தோடு சேர்த்து மொத்தம் 12 அடி அளவில் உள்ளது. இறுதி அலங்காரங்கள் கரும்பை வைத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி பல நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். விநாயகர் சதுத்தி முதல் அனந்த சதுர்தசி வரை தொடரும் இந்த பண்டிகை, இந்துக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ