சோமாவதி அமாவாசை எப்போது?
தற்போது கார்த்திகை மாதம் நடந்து வருகிறது. அமாவாசை திதி மாதம் ஒருமுறை வருகிறது. இந்து மதத்தில் அமாவாசைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்து நம்பிக்கைகளின்படி, சோமாவதி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமை வரும் அமாவாசை சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சோமாவதி அமாவாசை கார்த்திகை மாதமான, நவம்பர் 13 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது.
சோமாவதி அமாவாசை சிறப்பு
இந்த நாளில் மகாவிஷ்ணுவை சடங்குகளுடன் வழிபடுகிறார்கள். இந்நாளில் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி அன்னதானம் செய்யப்படுகிறது. அமாவாசை திதியில் புனித நதிகளில் நீராடுவது சிறப்பு வாய்ந்தது. நதியில் நீராடிவிட்டு, சூரியனுக்கு அர்க்கியம் செய்து முன்னோர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக அமாவாசை நாளில் விரதம் இருப்பது சிறந்தது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!
சோமாவதி அமாவாசை நேரம்
கார்த்திகை, கிருஷ்ண அமாவாசை தொடங்கும் நேரம் - 02:44 PM, நவம்பர் 12
கார்த்திகை, கிருஷ்ண அமாவாசை முடிவடையும் நேரம் - 02:56 PM, நவம்பர் 13
சோமவதி அமாவாசையின் மற்ற சில சிறப்புகள்
சோமாவதி அமாவாசை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நன்னாளில் முன்னோர்களுக்கு பிரசாதம் வழங்குவதன் மூலம், அவர்களின் சிறப்பு ஆசிகளைப் பெற்று, வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அடையலாம். சோமாவதி அமாவாசை அன்று சிவபெருமானை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த நன்னாளில் லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம் பணப்பிரச்சனைகள் நீங்கும்.
சோமவதி அமாவாசை பூஜை முறை
அதிகாலையில் எழுந்து குளிக்கவும். இந்த நாளில் புனித நதி அல்லது ஏரியில் குளிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குளிக்கும் நீரில் கங்கை நீரை கலந்து வீட்டிலும் குளிக்கலாம். குளித்த பின் வீட்டின் கோவிலில் தீபம் ஏற்றவும். சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விரதம் இருக்க முடிந்தால் உங்களின் பிரார்த்தனைகளுக்காக இருக்கலாம். முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யுங்கள். அவர்களை வழிபட்டு ஏழை எளியோருக்கு அன்னதானம், ஆடை தானம் கொடுக்கவும்.
மேலும் படிக்க | நவம்பரில் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ